பக்கம்:சைவமும் தமிழும்.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் - 555 அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்; விழிகள் அருவிநீர் பாய நிற்பேன்; ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல் அமுதகுணம் ஓங்க நிற்பேன்; எண்ணரிய ஆழியைத் தாண்டுபுள்போல் அன்பும் இறகினை விரிக்கும், அதனால் ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்; நீயும்.அதில் இன்புறுவை என்ப துணர்வேன்; நண்ணுதற் கான்வழி வேறெதுங் கண்டிலேன்; நானுமென் களிம யக்கால் நண்பனென் றேயழைக் கின்றனன்; என்னையாள் நாதனே! ஞான பரனே (2) வேறு இன்னிசைநீ பாடுமுறை ஏதுமறி யேன்நான் - இரவுபகல் கேட்டின்பம் எய்திவியந் திடுவேன்; மன்னுலகை ஒளிசெய்வ துன்னிசையின் ஒளியாம்; வானெங்கும் உலவுயிரும் உன்னிசையின் உயிராம்: பன்னரிய நின்னிசையின் பாலாறு பொங்கிப் - பாறைகளும் உடைந்துருளப் பாய்ந்தொழுகும் அதனோடு என்னிசையும் கலந்தொழுக ஏற்றகுரல் காணேன்; எண்ணிலிசை வலையிலிமுத் தெனை யாளும் இறையே!4 இதனைத் தொடர்ந்து வரும் பாடல்கள் வேறு யாப்பில் அமைந்துள்ளன. - (4 சுசீந்திர மாலை: ஒரே ஒரு பாடல்தான் மாலை என்ற பெயர் பெற்றுள்ளது. திங்களுன் கருணை காட்டும்; தீக்கண்உன் வெகுளி காட்டும்; 3. மலரும் மாலையும்-6, 8.