பக்கம்:சைவமும் தமிழும்.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 557 செந்தில் முருகா! திருமால் மருகா! என் சிந்தை குடிகொண்ட தேசிகா ! -வந்தினிய பைந்தமிழ்ச் சோலையிலே பாடும் கவிக்குயில்கள் சந்ததமும் வாழவரம் தா (4)" (8) அழகம்மை ஆசிரியவிருத்தம்: இது பத்துப் பாடல் களையும் காப்பாக விநாயகர்மீது அமைந்த பாடலும் கொண்டது. பாடல்கள் யாவும், தென்னிரத புரிவாழும்” என்னரிய செல்வமே ! தேவிஅழ கம்மை உமையே! என்று முடிவன. சீருதவும் நல்லூராம் தேரூர் அழகிதிருப் பேருதவும் பாவினையான் பேசவே-ஏருதய மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல் காத்தாண்டு கொள்ளக் கடன். . என்பது தேரூரில் எழுந்தருளியிருக்கும் உதய மார்த் தாண்ட விநாயகர்மீதுள்ள காப்பு. பொன்னையே பெண்ணையே மண்ணையே எண்ணிஎன் பொழுதெலாம் போக்கி விட்டேன்; புண்ணியச்செயலெதும் பண்ணியான் அறிகிலேன்; பொல்லாங்கு புரியும் நெறியேன், முன்னையோர் சொன்னமொழி உன்னாத முழுமூடன்; மூர்க்கரோ டுறவு கொண்டேன்; மூவுலகும் என்னையொப் பாரில்லை; இல்லை.இது முக்காலும் உண்மை, உண்மை; அன்னையே நின்னையே அல்லாது பின்னையோ ஆதாரம் வேறு உண்டோ? 6. மேலது 22, 23, 25 7. இரதபுரி-தேரூர். சுசீந்திரத்துக்கு அருகில் உள்ளது. கவிமணி பிறந்த ஊர். - -