பக்கம்:சைவமும் தமிழும்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 - சைவமும் தமிழும் அறிவற்ற சிறியேனை, அன்பற்ற கொடியேனை அடிமையாய் ஆண்டு கொள்வாய்; தென்னையே புன்னையே மன்னிவளர் சோலைளத் திக்கிலும் சூழும் ஊராம்; தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே ! தேவியழ கம்மை உமையே (4) என்பது நான்காம் பாடல். வாணிக்கும் நளினிக்கும் அரியதாய் என்றுன்னை வாயார வாழ்த்தி நின்றேன்; மந்தாரம் முல்லை.இரு வாட்சிநீ யென்றுதலை மாலையின் அணிந்து கொண்டேன்; கோனுக்குள் வளர்கின்ற குவிலென் றுனைத்தினம் கோணாது பேணுகின்றேன்; . . . குளிரான திங்களொடு கொண்டலென் றென்பவக் கோடையும் தீர வந்தேன்; . . . மாணிக்கம் வயிரமர கதமும்நீ யென்றென் மனப் பேடகத்து வைத்தேன்; வையகத் தெளியேனை ஆட்கொள்ள வந்தகுல மாதெய்வம் நீயல்ல வோ? சேனுக்கு நாட்டுபல துணுக்கு நிகரனெத் தெங்கிளஞ் சூழும் ஊராம் தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே ! தேவியழ கம்மை உமையே! (9)" என்பது இதன் ஒன்பதாம் பாடல். (9) கோயில் வழிபாடு: கோயில் என்பது சைவர்களால் கருதப்பெறும் சிதம்பரம், தில்லை. இதன் வழிப்ாடுபற்றி எட்டுப் பாடல்கள். இதில் நான்கு ஈண்டுத்தரப் பெறுகின்றன. 8. மலரும் மாலையும் - 30, 35