பக்கம்:சைவமும் தமிழும்.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் . 559 கோவில் முழுதுங்கண்டேன்-உயர் கோபுரம் ஏறிக்கண்டேன்; தேவாதி தேவனையான்-தோழி! தேடியுங் கண்டிலனே (1) தில்லைப் பதியுங் கண்டேன்-அங்குச் சிற்றம் பலமும்கண்டேன்; கல்லைக் கணிசெய்வோனைத்-தோழி! கண்களாற் கண்டிலனே (6) கண்ணுக் கினியகண்டு-மனத்தைக் காட்டில் அலையவிட்டு, பண்ணிடும் பூசையாலே-தோழி! பயனொன் றில்லை, அடி ! (7) உள்ளத்தில் உள்ளான், அடி ! -அதுநீ உணர வேண்டும், அடி! உள்ளத்தில் காண்பாய்எனில்-கோயில் உள்ளேயும் காண்பாய்அடி ! (8): கவிமணி கடவுளைப்பற்றி அதிகமாய்ப் பாட வாய்ப் பில்லை. காலம்பூராவும் ஆசிரியத்தொழிலில் சென்றது. தொழிலையொட்டிக் குழந்தைப் பாடல்கள், சமூகம் பற்றிய பாடல்களை அதிகமாகப் பாடியுள்ளார். தனிப்பட்ட மனிதர்கள்மேல் வாழ்த்துப் பாடல்கள் அதிகமாகப் பாடி யுள்ளார். அவர் காலத்தில் மக்கள் சத்துவகுணம் மிக்க அப்பெருமகனாரிடம் வாழ்த்துப் பாடல்களைப் பெறு வதைப் பெருமையாகக் கொண்டிருந்தனர். 9. மேலது - 1, 6, 7, 8