பக்கம்:சைவமும் தமிழும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சைவ சமய விளக்கு தருவதாக உள்ளது. இந்த உரையே ஏனையவற்றைவிட இன்றியமையாத சிறப்புடன் விளக்கமாக அமைந்துள்ளது. மேலும் சித்தியார், அனைவரும் சித்தாந்தப் பொருளை உணருமாறு எளிமையாகவும், விரிவாகவும், சைவாகமப் பொருள்களை ஆங்காங்குத் தந்துரைத்து அவற்றிற்கு விளக்கமாகவும் அமைந்துள்ளது. இக்காரணங்களால் இதுவே சித்தாந்தப் பெரு நூலாய்த் திகழ்கின்றது. இது பற்றியே 'சிவத்திற்குமேல் தெய்வம் இல்லை; சித்திக்கு மேல் நூலும் இல்லை என்ற ஒரு பழமொழியும் எழுந்தது போலும். தமிழ் நூல்கள் பலவற்றுள்ளும் சிறந்தவை யாகச் சிலவற்றைக் கூறும், வள்ளுவர் நூல் அன்பர்மொழி வாசகம், தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகன் செய்தஉரை-ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகு சித்தி ஓராறும் தண்டமிழின் மேலாங் தரம். என்ற வெண்பா சிவஞான சித்தியையே சாத்திரத்திற்குச் சிறந்ததாகக் காட்டுவதைக் காண்க. இதனைப் பாடிய முடையாரும் ஆகமங்கட்கெல்லாம் உரையாணி என்ற புகழ் மாலையையும் சூட்டியிருப்பதைக் கண்டு தெளிவா யாக. சித்தாந்தத்தினைத் தெளிவாக அறிய விழையும் நீ இந்த நூலை, குறிப்பாகச் சுபக்கத்தினை, ஒதவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பதை நினைவிவிருத்துவா &#frcm。 - இருபா இருபது (5) என்னும் நூலில் இதன் ஆசிரிய ராகிய அருணந்திதேவர் சிவஞான போதத்தால் உணர்ந்த சித்தாந்தப் பொருளினும் மிக நுண்ணிய பொருள்களைத் தாம் தம் ஆசிரியராகிய மெய்கண்டதேவரை வினவியறிந்த