பக்கம்:சைவமும் தமிழும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 盛散 வற்றை விளக்கியுரைக்கின்றார். இங்கு வினாக்களை 20 பாடல்களில் வெளிப்படையாகக் கூறி விடைகளைக் குறிப் பால்தான் பெற வைத்துள்ளார். இவற்றைச் சிந்தித்து அறிதல் வேண்டும். உண்மை விளக்கம் (6) என்னும் நூலில் இதன் ஆசிரியர் திருவதிகை மனவாசகம் கடந்தார் தத்துவங்களைச் சுருக்க மாகவே உரைக்கின்றார். இதில் ஆசிரியர் தம் குருநாதர் மெய்கண்டாரை வினாவுகின்றார்: குருநாதர் சீடருக்கு விளக்கம் தருகிறார். வினா-விடையாக அமைந்த இந்நூல் சித்தாந்தம் பயில விரும்பும் நீ முதற்கண் பயில வேண்டிய நூலாகும். இதில் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், கத்த சத்துவம், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்கள், உயிரியல்பு, பதியியல்பு. ஐந்தெழுத்து. நடராச தத்துவம். அத்துவித முத்தி, குருலிங்க சங்கம வழிபாடு என்பன வ விளக்கப்பெறுகின்றன. பக்தியுடன் பயின்றால் மெய்கண்டாரே நினக்கு உபதேசம் செய்யும் உணர்வு பெறுவாய். காப்பு, சிறப்புப் பாயிரம் உட்பட்ட 55 வெண் பாக்களால் அமைந்துள்ளது. இந்நூல். சிவப்பிரகாசம் (1) இது சிவஞான போதத்தின் சார்பு நூலாகும். இது சிவஞான சித்தியார் போலச் சிவஞான போதத்தை அடியொற்றிச் செல்லுவதாக அமையவில்லை. போதத்தின் கருத்தை மட்டிலும் உளங்கொண்டு போது, உண்மை என்னும் இருபிரிவினதாய் நடைபெறுகின்றது. முன்னைய முதல், வழி நூல்களில் விளக்கப்பெறாத பல நுண்ணிய கருத்துகள் ஈண்டு விளக்கம் அடைகின்றன. இதனால் அவ்விரு நூல்களிலும் நுவலப் பெறாத சில மூல ஆகம, உப ஆகமக் கருத்துகளும் இதில் சொல்லப் பெற் துள்ளதாக ஆசிரியரே தெரிவிக்கின்றார். இவ்வாற்றால் முன்னைய நூற் பொருள்களைச் சுருங்க உணர்வதற்கு இந்நூல் ஒருவாறு துணையாக இருக்கும். ஆகவே, அந் நூல்களைப் பயில்வதற்கு முன்னதாக இதனைப் பயிலலாம். நூறு விருத்தப் பாக்களால் அமைந்தது;இந்நூல்,