பக்கம்:சைவமும் தமிழும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - சைவ சமய விளக்கு திருவருட்பயன் (8) என்னும் இந்நூல் சித்தாந்தப் பொருள்களை அடைவுபடத் தொகுத்துக் குறள் வெண் பாக்களால் கூறுகின்றது. 10 குறள்கள் வீதம் 10 இயல் களில் அமைந்த இந்நூலில் 108 குறள் வெண்பாக்கள் அடங்கியுள்ளன. தொடக்கத்தில் காப்பாக முதற்கண் தனிக்குறள் வெண்பா ஒன்று உள்ளது. உலகியல் திருக் குறள், வீட்டினை அறத்துப் பாலில் அடக்கிக் கூறுகின்றது. இந்நூலில் வீடுபற்றிய கருத்து தனியாக எடுத்துக்கூறப் பெறுகின்றது; இதனால் இதனை மெய்ந்நெறித் திருக் குறளாகக் கொண்டு நாம் ஓதி வீடாகிய முடிந்த பயனைப் பெற வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருத்தல் வேண்டும். சைவப் பெருமக்கள் இதனை உண்மை விளக் கத்திற்குப் பின்னர்க் கற்று, அதன் பின்னர்ச் சிவப் பிரகாசத்தைக் கற்றலை ஒரு மரபாகக் கொண்டுள்ளனர். இம்முறையை நீயும் கடைப் பிடிப்பாயாக. வினாவெண்பா (9) என்னும் இந்நூல் இருபா இருபஃது போன்றது. அஃதாவது இதன் ஆசிரியர், தம் ஆசிரிய ராகிய மறைஞான சம்பந்தரிடம் வினவி அறிந்த நுண் பொருள்களை வினாவடிவிலே உணர்த்துகின்றார், இந்நூல் 13 வெண்பாக்களால் நடைபெறுகின்றது. போற்றிப் பஃறொடை வெண்பா (10) இறைவன் உயிர் கட்குத் தன் பெருங் கருணையால் கைம்மாறு கருதாத பேருதவியைச் செய்து வருகின்றான். இதனைத் தத்துவ நெறியால் உணர்ந்து அவனைப் போற்றி உரைப்பதாகச் செய்யப் பெற்றது இந்நூல். ஆகவே, இதில் பல தத்துவக் கருத்துகள் தாமாகவே அமைந்து விளங்குவனவாயின, இது 95 கண்ணிகளையுடைய கலி வெண்பாவால் அமைந்தது. கொடிக் கவி (11) என்னும் இந்நூல் ஜந்து திருப்பாடல் களால் ஆனது. இதன் ஆசிரியர் உமாபதி சிவம் தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவர் என்பதை நீ அறிவாய்.