பக்கம்:சைவமும் தமிழும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼彦 சைவ சமய விளக்கு போன்றது. பர் பக்கத்தில் புறச்சமயங்களே மறுக்கப்படு கின்றன. இந்நூலின்கண் அகச்சமயங்கள் மறுக்கப்படு கின்றன. இதுவே இவை தம்மில் உள்ள வேறுபாடு. இத னால் இது சித்தாந்தத்தினைத் தெளிவாக உணர்வதற்குப் பயன்படுகின்றது. புறச் சமயங்களில் மாயாவாதம் தமிழ கத்தில் சித்தியாருக்கு ப் பின்னரும் வலிமை பெற்று நின்ற மையால் அதனை இந்நூலின் தொடக்கத்தில் பரபக்கத் தினும் விரிவாகவும் நுட்பமாகவும் மறுக்கப் பெற்றுள்ளது. அகப்புறச்சமயமாகிய ஐக்கியவாதம் பரபக்கத்துள் மறுக் கப் பெறாமையால் அதனை மாயாவாதத்தை அடுத்து இந்நூல் மறுக்கின்றது. - இக்கூறிய பதினான்கு சாத்திரங்களையும் நன்கு ஒதி உணர்ந்தால் சித்தாந்த ஞானம் ஐயந்திரிபின்றி நின்னிடம் இனிது அமையும். துகளறு போதம், ஞானாமிர்தம், பல கட்டளைகள்' முதலிய தமிழ் நூல்களையும் சித்தாந்த சாராவளி, அட்டப் பிரகரணம், பவுட்கர விருத்தி போன்ற வடநூல்களையும் அறிந்து கொண்டால் சித்தாந்தத்தில் மேலும் தெளிவு பிறக்கும். இதனால் நம் நாட்டுச் சமய 25. தருக்கம், மீமாம்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கி யம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம் என்பன புறச் சமயங் கனாகும். 26. பாடானவாத சைவம், பேதிவாத சைவம், சிவசமவாத சைவம்,சிவ சங்கிராந்தவாத சைவம்,ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்தகாரண பரிணாமவாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம் என்ற ஆறும் அகச் சமயங்களாகும். சுத்த சைவம்' என்பதும் இன்று உண்டு. 27. பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்ற ஆறும் அகப்புறச் சமயங்களாகும். 28. சிவப்பிரகாசக் கட்டளை, திருவாலவாய்க் கட்டளை, சித்தாந்தக் கட்டளை (பூவை கலியாண சுந்தரமுதலியார் இயற்றியது) சித்தாந்த சாதனக் கட்டளை, சித்தாத்த தசகாரியக் கட்டளை (டிெயார் இயற்றியவை) ஆகிய ஐந்து கட்டளைகள் உள்ளன, < - -