பக்கம்:சைவமும் தமிழும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 25 அறிஞர்கள் அக உலகத்தை எவ்வெவ்வாறெல்லாம் சிந்தித் துள்ளனர் என்பது தெளிவாகும். - - அன்பன், கார்த்திகேயன். E அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். விழைவதும் அஃதே. சைவ சித்தாந்தக் கருத் தினைப் பக்தியதுபவத்துடன் அறிவதற்குத் திருமுறை பயிற்சி மிகவும் இன்றியமையாதது. திருமுறைகள் பன்னி ரண்டு. இவைபற்றியும் சுருக்கமாக நீ அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாததால் இவற்றை இக் கடிதத்தில் அறிமுகம் செய்து வைப்பேன். சோழப் பேரரசன் இராசராசன் வேண்டு கோட் கிணங்கி தம்பியாண்டார் நம்பி வழக்காறற்று மறைந்து கிடந்த மூவர் பாடிய தேவாரப் பாக்களைத் தேடி எடுத்து அவற்றை ஏழுதிருமுறைகளாக வகுத்த வரலாறு திருமுறை கண்ட புராணத்தால் அறியப்பெறும் செய்திகளாகும். இவற்றின் விவரங்களைப் பன்னிரு திருமுறை வரலாறு' என்ற நூலில் விரிவாகக் காணலாம். முதல் மூன்று திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்கள் அடங்கியுள்ளன. கான்கு முதல் ஆறு திருமுறைகளில் திருதாவுக்கரசரின் திருப்பாடல்கள் முறைப் படுத்தப்பெற்றுள்ளன. ஏழாங் திருமுறையில் சுத்தரமூர்த்தி அடிகளின் திருப்பாடல்கள் அடங்கியுள்ளன. இந்த ஏழு திரு முறைகளும் தேவாரம் என்ற திருப்பெயரால் வழங்கி வருகின்றன. 德9。 డెవౌ வாரணன், க : பன்னிரு திருமுை வரலாறு. - முதற்பகுதி. பக் (6-11) - р -