பக்கம்:சைவமும் தமிழும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙器 சைவ சமய விளக்கு மணிவாசகப் பெருமான் அருளிச்செய்த 'திருவாசகம்’ "திருக்கோவையார்’ என்ற இரண்டு நூல்களும் எட்டாம் திரு முறையில் அடங்கும். ஒன்பதாக் திருமுறையில் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிய முதர், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்ப தின்மர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் இருபத்தெட்டும் அவருள் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டாகிய பதிகம் ஒன்றும் ஆக இருபத்தொன்பது பதிகங்கள் அடங்கும். திரு மூலர் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் பத்தாங் திருமுறையாகவும், திருவாலவுடையார் திருமுகப்பாசுரம், காரைக்கால் அம்மையார் பாடிய பிரபந்தங்கள் முதலிய வற்றைப் பதினோராங் திருமுறையாகவும் வகுத்தருளினார். பின்னர் நம்பி சோழ மன்னனது விருப்பத்திற்கிணங்கத் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி, ஞான சம்பந்தர்மீது பாடிய திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திரு மும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம் பகம், திருத்தொகை ஆகிய ஏழு பிரபந்தங்களையும்; திருநாவுக்கரசர் மீது பாடிய திருவேகாதசமாலையையும் பதினோராந் திருமுறையில் சேர்த்தருளினார்." சேக் கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம்’ என்ற பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாக அமைந் தது. திருமுறை” என்னும் பெயர் மூவர் அருளிய திருப் பதிகங்கட்கு மட்டுமே வழங்கி வந்தது. நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்குப் பின்புதான் திருவாசகம் முதலிய ஏனைய நூல்கட்கும் உரியதாய் வழங்கப்பெற்றதென்பது திருமுறை கண்ட வரலாற்றால் நன்கு தெளிவாகின்றது. தேவாரத் திருமுறைகள் திருக்கோயில்களில் வைத்து வழிபடப்பெற்று வந்தன. அத் திருப்பதிக ஏடுகள் சிதை 80. திருமுறைப் பாகுபாடு பற்றிய கருத்து வேறுபாடு உள்ளது. இதுபற்றிய ஆய்வைப் பன்னிரு திருமுறை வரலாறுமுதற்பகுதி:பக்கம் (2428) கண்டு தெளிக,