பக்கம்:சைவமும் தமிழும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 27 யாத வண்ணம் அவற்றைப் போற்றிக் காப்பதற்குத் தமிழ்ப் புலமை மிக்க தமிழ் விரகரும், அத்திருப்பதிகங் களைப் பொருளுணர்ந்து இசையோடு இறைவன் முன்னி லையிற் பாடிப் போற்றுதற்கு ஒதுவார்களும் அந்நாளில் திருக்கோயில்களில் நியமிக்கப்பெற்றுப்பணிபுரிந்துவந்தனர் என்பன போன்ற செய்திகள் கல்வெட்டுகளால் அறியக் கிடக்கின்றன. பண்டை நாட்களில் இத்திரு முறைகளை நம் முன் னோர் சிவத்துவம் வெளிப்பட்டுத் திகழும் சிறந்த அருள் நூல்களாகக் கொண்டு வழிபட்ட உண்மைக்குப் பல சான்று கள் உள்ளன." சிவபூசையின் ஒரு சிறந்த அங்கமாகவே இத்திரு முறை வழிபாடு முன்னுள்ள பெருமக்களால் மேற் கொள்ளப்பட்டு வந்ததென்று அறியக் கிடக்கின்றது, இந்தத் திருமுறைகள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு முடிய அமைந்த காலத் தில்தான் தோன்றின என்பதை நீ அறிதல் வேண்டும். இப் பன்னிரண்டு திருமுறைகளையும் அருளிச் செய்த ஆசிரியப் பெரு மக்கள் திருமூலர், காரைக் கால் அம்மையார் (காலத் தால் முற்பட்டவர்கள்) முதல் சேக்கிழார் (காலத்தால் பிற்பட்டவர்) ஈறாகவுள்ள இருபத்தெழுவர். இப்பெரு மக்களாற் பாடப்பெற்றனவாக இப்போது நமக்குக் கிடைத்துள்ள பன்னிரு திருமுறைகளிலும் ஏறக்குறைய பதினெண்ணாயிரம் திருப்பாடல்கள் காணப்படுகின்றன என்பதையும் நீ உளங்கொள்ளல் வேண்டும், சிவபூசை, அடியார் பூசை, குரு பூசை ஆகிய வழிபாடு களுக்கு எத்துணைப் பயன் உண்டோ அத்துணைப் பயன் இத்திருமுறை வழிபாட்டிற்கும் பாராயணத்துக்கும் உண்டென்பர் பெரியோர். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பல படிகளாக வகுத்துச் செய்யப்படும் சிவ வழிபாட்டினைத் தவிர உயிர்கள் உய்தி பெறுவதற்கு 31. பன்னிரு திருமுறை வரலாறு-முதற்பகுதி-பக் (45-46)