பக்கம்:சைவமும் தமிழும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺器 சைவ சமய விளக்கு வேறு சாதனம் இல்லை என்பது சைவ நூல் துணிபு. இறை வனது திருவருளாகிய சிவஞானம் ஒன்றினால்தான் அப் பெருமானை உள்ளவாறு உணர்ந்து வழிபடுதல் கூடும். இறைவன் அருளிய திருவருள் ஞானத்தால் அம்முதல்வனை வழிபடும் பதிகப் பெரு வழியினை அமைத்துத் தந்த திருவருட் செல்வர்கள் காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர், அப்பர் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப் பெருமான் முதலிய திருமுறையாசிரியர் களாவர். சிவஞானிகளாகிய அப்பெரு மக்கள் அனைவரும் பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அறிவுறுத்த பொய்தீர் ஒழுக்க நெறி நின்ற செம்புலச் செல்வர்கள் . ஆகவே, அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகள் யாவும் உயர்ந்த ஞான நூல்களாகத் திகழ்கின்றன. இத் தகைய சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் காதலாகிக் கசித்து கண்ணிர் மல்கி” ஒதலும், பிறரை ஒதும்படி செய்தலும், பிறர் சொல்லத் தாம் கேட்டலும், பிறரைக் கேட்கும்படி துரண்டுதலும், ஞான நூல்களாகிய இவற்றின் பொருள் நலன்களை இடைவிடாது சிந்தித்தலும் என ஐந்து வகையாலும் பயின்று வழிபடுதல் வேண்டும் என்று உணர்த்தியுள்ளனர் பெரியோர். "ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு, ஞானத்தால் உனை நானும் தொழுவேனே' என்றவாறு சிவஞானம் பெற்ற பெரியோர்கள் அருளிய இத்திருமுறைகளைச் சாதனமாகக் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டுப் போற்றும் முறை ஞானபூசை யென நூல்களால் பாராட்டப் பெறுகின்றது. இந்த உண்மை, ஞான நூல்தனை யோதல்; ஒது வித்தல் கற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்கு ஈனமிலாப் பொருளதனைச் சிங்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை' 32. தேவாரம் 5-91 : 8 38. சித்தியார்-8-23