பக்கம்:சைவமும் தமிழும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 23 என்ற அருள்நந்தி சிவாச்சாரிய சுவாமிகளின் பொருள் பொதிந்த பொன்னுரையால் தெளியலாம். திருமுறைகளை அருளியவர்கள் யாவரும் நிறைமொழி மாந்தர்கள். இவர்கள் வரலாற்றினால் திருமுறைகள் யாவும் மறைமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது தெளிவாகும். மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்று கூறுவர் பெரியோர். இத்திருமுறைகளை அன்பினால் ஒதி யுனரும் இயல்புடையோர், இவ்வுலக வாழ்வில் நேரும் எல்லாத் தீங்குகளும் நீங்கி எல்லாவித நலன்களையும் பெற்று இன்புறுவர் என்பது ஆன்றோர்களின் அதுபவம். இம்மையேதரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு பாதும் ஐயுறவு இல்லையே." என்ற திருவாக்கால் அறியலாம். இத்திருமுறைகளை ஒதி வழிபடும் இயல்புடையோர் இம்மை மறுமைப் பயன்களை யும் ஒருங்கு பெற்று மகிழ்வர் என்பது திண்ணம். இக்காரணத்தால் அடுத்துத் தொடர்ந்து எழுதும் கடிதங்களில் தத்துவங்களை விளக்க வேண்டிய இடங்களில் இயன்றவரை இத் திருமுறைத் திருப்பாடல்களை பொருத்தமாக அமைத்துக் காட்டுவேன். - அன்பன், கார்த்திகேயன். AeeeeeMTeMMMeAAASAAAA 34. தேவாரம், 7:34 : !