பக்கம்:சைவமும் தமிழும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி-சிவன் பலகலைஆ கமவேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சங்தெரித்தல் பதிபரமே அதுதான் நிலவும்அரு உருவின்றிக் குணம்.குறிக ளின்றி நின்மலமாய் ஏகமாய் கித்த மாகி அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி அகண்டிதமாய் ஆனந்த உருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே! அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுந் தானே அவன்." அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்-அம்மையப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார், இப்புறத்தும் அல்லார்போல் கிற்பார் அவர்." 1. சிகப்பிரகாசம்-13 2. அற்புதத் திருவந்தாதி-20 8. களிறு-1