பக்கம்:சைவமும் தமிழும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புநிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைக. சென்ற இயலில் சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபாகக் கொள்ளப்படும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்று குறிப்பிட்டேன் அல்லவா? அவற்றுள் பதியைப் பற்றிய சித்தாந்தக் கருத்துகளை இந்த இயலில் விளக்கு வேன். சித்தாந்தம் சற்காரிய வாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டேன். அதனை ஈண்டு நினைவு கூர்க. வைதிக சமயங்கள் யாவும் கடவுள் உண்டு என்ற கொள்கையை உடையன. கடவுள்' என்ற தனித் தமிழ்ச் சொல்லின் பொருளிலேயே சைவ சித்தாந்த கருத்து: பெரிதும் அடங்கியுள்ளது என அறிஞர் காட்டுவர். இத் தனித் தமிழ்ச் சொல் புறநானூறு, தொல்காப்பியம் போன்ற பழைய நூல்களிலேயே காணப் பெறுகின்றது. இச் சொல்லுக்கு மூன்று விதமாகப் பொருள் கூறலாம். கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே, கடவுள்' என்ப தற்கு உலகை இயக்குபவர் என்பது கருத்தாகின்றது. ‘கடவுள்' என்பதற்கு உள்ளத்தைக் கடந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். மூன்றாவது பொருளாக கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர் எனக் கொள்ளுவது என்றும் கொள்ளலாம். இப்பொருளில் 4. இயல்-1: கடிதம் .ேபக். 4 5. புறம்-108,399 6. தொல். பொருள். புறத்திணை-27 சை, ச, வி.-3