பக்கம்:சைவமும் தமிழும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சைவ சமய விளக்கு "உலகினுள்ளும் உயிர்களுள்ளும் வியாபித்து நிற்கும் நிலையை உள்’ என்ற சொல்லும் அவற்றைக் கடந்து நிற்கும் நிலையைக் 'கட' என்ற சொல்லும் குறிக்கும்.” "உலகை இயக்குபவன் இறைவன். அவன் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்தவன். அதே சமயம் அவன் உலகினை யும் கடந்து நிற்பவனும் ஆவன்'-என்று "கடவுள்' என்ற சொல்லிலேயே அடங்கியுள்ள கருத்துகள் சைவ சித்தாந்தக் கருத்துகளாகும். - இனி, சைவ சித்தாந்தம் கடவுளைப்பற்றி நேரடி யாகக் கூறுவனவற்றை விளக்குவேன். கடவுளைப்பற்றிய ஒன்று: சைவ சித்தாந்தக் கருத்துகளை இரு பிரிவாகப் பிரிக் கலாம். கடவுள் உண்டு என்பதை மெய்பிப்பது. இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்க்ளையும் கூறுவது. இங்கு முதற் பிரிவினை மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக் கலாம். அவற்றைச் சித்தியார் சுபக்கம், பரபக்கம் என்று குறிக்கும். கடவுள் உண்டு என்பதைக் காரணங்கள் காட்டி மெய்யிப்பது சுபக்கம்; கடவுள் இல்லை என்று வாதிப்போரது வாதங்கள் பொருந்தா என்பதை மறுத்துப் பேசுவது பரபக்கம். ஒரு பொருள் உண்டென்பதை மெய்பிக்கப் பொது வாக மூன்று வழிகள் உண்டு. இந்த வழிகளைப் பிரமா ணங்கள் என்று குறிப்பிடுவர். பிரமாணம் என்பதைத் தமிழில் அளவை என்று கூறலாம். பிரத்தியட்சம் (காட்சி), அநுமானம் (கருதல்), ஆப்த வாக்கியம் (பெரி யோரது பெருமொழிகள்) ஆகிய மூன்றுமே பிரமாணங் களாகும். ஐம்பொறிகள் வாயிலாக நேரில் அறிவதைப் பிரத்தியட்சம் என்பர். தொலைவில் புகை தெரிகின்றது. ஆனால் நெருப்பு இருப்பது கண்ணுக்குப் புலனாவதில்லை. நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பல முறை நேரில் கண்டுள்ளோமாதலால் நெருப்பைக் காணாமலேயே புகையை மட்டிலும் கண்டு நெருப்பு 7. தம்பத் தகுந்த சொல்-என்பது நேர் பொருள்.