பக்கம்:சைவமும் தமிழும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 35 அங்கு உள்ளது என்பதைத் திடமாக அறிகின்றோம். இந்த அறிவு அதுமானம் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. மூன்றாவதாகிய ஆப்த வாக்கியம் ஒரு பொருளை அநுபவத் தால் அறிந்த மகான்களின் வாய்மொழிமூலம் அறிவ தாகும். இவர்களது வாக்கைக் கேட்டதன்மூலம் அறிவ' தால் இதைச் சுருதிப் பிரமாணம் எனவும் குறிப்பிடுவர். "ஸ்ரு' என்பதற்குக் கேட்டல்’ என்பது பொருளாகும். இதன் அடியாகப் பிறந்தது சுருதி. சுருதிப் பிரமாணத்தை ஆகமப் பிரமாணம் (உரைகளவை) என்றும் வழங்கலாம். இறுதியாகக் குறிப்பிட்ட பிரமாணத்தையே சைவ சித்தாந்திகள் மேற்கொள்ளுகின்றனர். ஏனைய இரண்டு பிரமாணங்களையும் கொண்டு 'கடவுள் உண்டு' என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், இப்பிரமாணமே முக்கிய பிரமாணமாகக் கொள்ளப்பெறுகின்றது. இதனால் அநுமானப் பிரமாணத்திற்குச் சைவ சித் தாந்தத்தில் இடம் இல்லை என்று கருதுதல் வேண்டா. வேதம் அல்லது ஆகமம் மூலம் பெறும் உண்மையை அதுமானம்மூலம் நிலை நாட்டச் சித்தாந்திகள் முயன் றுள்ளனர். இதற்கு இரு காரணங்கள் உண்டு, ஒன்று: வேதத்திலே நுவலப்பெற்றவற்றை மேலும் வலியுறுத்த அநுமானப் பிரமாணம் பயன்படும். இரண்டு: வேத வாக்கை ஒரு பிரமாணமாக ஒப்புக்கொள்ளாதவர்களுக்குக் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்க அநுமானம் மட்டுமே ஓரளவு பயன்படும். - அநுமானத்தைக் கொண்டு கடவுள் உண்டு என்பதை மூன்று விதமாக மெய்ப்பிக்கலாம். முதலாவது; உலகியல் உண்மையைக் கொண்டு அதனைப் படைத்தவனும் உளன் என்று மெய்ப்பிப்பது. இரண்டாவது: படைப்பின் நோக் கத்தை ஆராய்வதன்மூலம் படைத்தவனும் உளன் என மெய்ப்பிப்பது. மூன்றாவது: பொருள்களிலுள்ள குறை 8. ஆகமம்-ஒன்றிலிருந்து வந்தது என்பது பொருள்.