பக்கம்:சைவமும் தமிழும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 37 நுண்ணிலையில் உள்ளதாகிய உலகம் பரு நிலையில் தோன்ற வேண்டுவது இன்றியமையாததாயிற்று. இங்ஙனம், நுண்ணிலையில் இருந்த உலகத்தை இப்பரு நிலையில் கொணர்ந்தவன் இறைவனாதலின் இவ்வுல கத்தைப் படைத்தவன் ஒருவன் உளன் என்பது பொருந் துவதாகின்றது. இதனால் நாம் தெளியும் பொருள் இது: தோற்றம் என்பது காணப்படாத நுண்ணிலையின் நீங்கிக் காணப்படும் பரு நிலையை அடைவது; நிலை’ என்பது, காணப்படும் நிலையில் இருத்தல் ஆகும்; அழிவு' என்பது, காணப்பட்ட பரு நிலையின் நீங்கி முன் போலக் காணப்படாத நுண்ணிலையை அடைதல்” ஆகும் , இதனைச் சுருக்கமாக இல்லது தோன்றாது; உள்ளது அழியாது என்று கூறலாம். இதுவே சற் காரியவாதத்தின் சுருக்கம் ஆகும். சற் காரிய வாதத்தைச் சார்ந்து உள்ளது என்றும் அழிவதில்லை’ என்பதும் சொல்லப்படும். ஒரு மெழுகு வத்தி எரிவதால் இழப்பு ஒன்றும் இல்லை (Nothing is tost when a candle is burrt) grairo Gai Gustuuár 2-sivanto யும் இதனையொத்ததாகும் என்பதையும் சிந்திப்பாயாக. இதனையும், தெளிவாக்குவது இன்றியமையாததா கின்றது. உள்ளது எக்காலத்தும் உள்ளதே, அஃது என்றும் இல்லதாதல் இல்லை. இங்ங்ணமே, இல்லது எக்காலத்தும் இல்லதே, அஃது என்றும் உளதாதல் இல்லை. ஆகவே, தோற்றம்’ என்பதும் அழிவு' என்பதும் அவற்றையுடைய பொருள்களின் நிலை மாற்றங்களேயன்றி வேறல்ல என்பதைத் தெளிவாயாக. தோன்றி அழியும் நிலை காரிய நிலை என்றும், தோற்றத்திற்கு முன்னும் அழி விற்குப் பின்னும் உள்ள நிலை காரண நிலை என்றும் வழங்கப்படும். இதனால், தோன்றுதல் என்பது காரண நிலையிலிருந்து காரிய நிலையை அடைவதாகும்; அழித லாவது, காரிய நிலையிலிருந்து மீண்டும் காரண நிலையை அடைவதாகும்.