பக்கம்:சைவமும் தமிழும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சைவசமய விளக்கு இதனை ஓர் எடுத்துக் காட்டால் தெளிவிப்பேன். 'குடம் தோன்றிற்று' என்பதில் அது மண்' என்னும் நிலை யிலிருந்து குடம் என்னும் நிலையை அடைந்தது என்பதே பொருள். குடம் அழிந்தது' என்பதில் குடம் என்னும் நிலையிலிருந்து முன் போல் மண்' என்னும் நிலையை அடைந்தது என்பதுவே பொருளாகும். இவ்வாறு நிலை வேறுபடினும், இரு நிலையிலும் பொருளின் தன்மை ஒன்றாகவே இருக்கும். அதாவது, மட்குடம் மண்ணின் தன்மையையும், பொற்குடம்’ பொன் னின் தன்மையையும் கொண்டிருத்தலால் இதனைத் தெளியலாம். இதனால் பயன் வேறுபாடுபற்றிக் காரணப் பொருளையும் காரியப் பொருளையும் மண் என்றும் குடம் என்றும் கடுபான்’ என்றும் ஆபரணம் என்றும் வேறு வேறு பொருள் போல வழங்கினாலும் பொருட்டன்மையால் அவை ஒன்றே யாதல் கண்டு தெளிவாயாக. இதனை இன்னொரு விதமாகவும் விளக்குவேன். தோற்றமும் அழிவும் பொருள்களின் நிலை மாற்றங்கள் என்பது எப்படி? முன் சூக்குமமாய்-நுட்பமாய்-விளங் காது உள்ள பொருளே பின் தூலமாய்-பருமையாய்விளங்கி நிற்கும் என்பதே இதன் விளக்கமாகும் என்பதை அறிவாயாக. இரண்டு எடுத்துக் காட்டுகளால் இந்த உண்மையைத் தெளியலாம். எள்ளைப் பிழிந்தால் எண் ணெய்தோன்றும்.மணலைப் பிழிந்தால் எண்ணெய் தோன் றுமோ? தோன்றாது. ஏன் தோன்றாது? எள்ளில் எண் ணெய் சூக்குமாய் உள்ளது. மணலில் எண்ணெய் எவ்வகை யிலும் இல்லை. அதனால் எள்ளைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றுகிறது; மனலை அவ்வாறு செய்தால் எண்ணெய் தோன்றுவதில்லை. மற்றுமோர் எடுத்துக்காட்டு: முயற் குட்டி, பசுங் கன்று, யானைக் கன்று இவற்றின் தலையில் தொடக்கத்தில் கொம்பு இல்லை; நா ள ைட வி ல் பகங்கன்றின் தலையில் கொம்டி தோன்றுகிறது. இது போலவே யானைக் கன்றின் வாயிலிருந்தும் தந்தம்