பக்கம்:சைவமும் தமிழும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 33 தோன்றுகின்றது. ஏன்? பசுங்கன்றின் தலையில் கொம்பு சூக்குமாய் உள்ளது. அதனால் அது பின்பு தூலமாய்த் தோன்றுகின்றது. யானைக் கன்றின் வாயிலும் தந்தம் சூக்குமாய் உள்ளது. அதனால் அது பின்பு துலமாய்த் தோன்றுகிறது. முயல் குட்டியின் தலையில் கொம்பு முன்பு எவ்வகையிலும் இல்லை. அதனால் அஃது எக்காலத் திலும் தோன்றுவதில்லை. இவற்றால் இல்லாதது எக் காலத்தும் இல்லாததே அதனால், உள்ளதுதான். தோன் றும்; இல்லது தோன்றாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆகவே, தூலமாய்த் தோன்றும் பொருள் கள் யாவும், அவ்வாறு தோன்றுவதற்கு முன்னர் சூக்கும் மாய் உள்ள பொருள்களே என்பது தெளிவாகின்றதல்லவா? இங்ஙனம் கூறும் சற்காரீயத்தையே உமாபதி சிவாச்சாரி யாரும் மருவு சற்காரியத்தாய்' என்று தமது சிவப் பிரகாச நூலில் கூறியருளினார் என்பதையும் உளங் கொள்வாயாக. - - 'இல்லாமல் பிறவாது', சட்டியில் இருந்தாலன்றோ அகப்பையில் வரும்?’ என்பன போன்ற முதுமொழிகள் பலவும் சற்காரிய வாதத்தையே விளக்குவனவாகக் கொள் வதில் தவறில்லை. இந்த வாதமுறை இல்லையாயின் மண்ணிலிருந்து ஆடையும் நூலிலிருந்து குடமும், நெல்லி லிருந்து கமுகும் தோன்றாமல் மண் முதலியவற்றிலிருந்து முறையே குடமும், ஆடையும், நெல்லுமே தோன்றுகின்ற வரையறை இல்லாதொழியும். நிலத்தை அகழ்ந்தால் நீர் தோன்றுகின்றது; சில இடத்தில் பாறை தோன்றுகின்றது: சில விடத்தில் பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றுக்குக் காரணம் அப்பொருள்கள் ஆங்காங்கு இருப்பதேயாகும் என்பது தெளிவு. அதனால் 'உள்ளதே தோன்றும் என்னும் சற் காரிய வாதம் எளிதில் உடன்படக் கூடியது என்பதும் தெளிவாகின்றது அல்லவா? இன்னோர் உண்மையையும் நீ சிந்தித்து அறிதல், 11, சிலுப்பிரகாசம்