பக்கம்:சைவமும் தமிழும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சைவ சமய விளக்கு வேண்டும். நிலத்தினுள் நீர் முதலியன பரு நிலையில் உள்ளனவாதலால் அவற்றது உண்மை எளிதில் புலனா கின்றது. ஆனால், மண் முதலியவற்றில் குடம் முதலியவை நுண்ணிலையில் இருத்தலால் அவற்றது உண்மையை அரிதில்தான் உணர வேண்டும்; சிந்தித்துதான் தெளிதல் வேண்டும், இந்த விளக்கத்தின் அடிப்படையில் வதி, பசு, பாசம்’ என்ற முப்பொருள்களை நோக்குவோம். இந்த மூன்று பொருள்களுள் ஒன்றே உள்ளது; ஏனையவை அதில் தோன்றி ஒடுங்குவன என்று கொள்ளின் அதனால் வரும் குற்றம் என்ன? அஷ்டிக் கொண்டால் ஒன்று காரணப் போருளும், ஏனையவை அதன் காரியக் பொருளும் ஆகும். இங்கு காரணப் பொருளின் தன்மையே காரியப் பொருளி லும் உளவாதல் வேண்டும்; அதாவது மூன்று பொருள்களின் தன்மையும் ஒன்றாக இருத்தல் வேண்டும். ஆனால் அன் வாறு இல்லை; மூன்று பொருள்களும் மாறுபட்ட தன்மை களைக் கொண்டுள்ளன. ஆகவே, இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்னாது மூன்றும் தனித் தனிப் பொருள்களே எனக் கோடலே பொருந்துவதாகும் என்பது தெளிவாகின்றதல்லவா? இனி, இல்லாது தோன்றாது, உள்ளது அழியாது’ என்ற சற் காரியக் கொள்கையின்படி மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறு வேறாய்த் தோன்றும் மூன்றுபொருள் களுள் யாதொன்றினையும் ஒரு காலத்துத் தோன்றிற்று” என்றோ ஒரு காலத்தில் அழியும்’ என்றோ கூறுதல் கூடாது ஆகலின் இந்த மும் பொருள்களும் அனாதி நித்தியப் பொருள்களாகக் கொள்ள வேண்டியதன் இன்றி யமையாமை தெளியப்படுதலைக் காண்க. இன்னும் மாறு பட்ட பல தன்மை ஒரு பொருளின் கண் இருத்தல் இயலாது” என்பதும் ஒரு சித்தாந்த உண்மையாகும். அதாவது தட்ப மும் வெப்பமும் போன்ற மாறுபட்ட தன்மைகள் உண்ழை யும் இன்மையும் போன்ற மாறுபட்ட தன்மைகளும் ஒரு