பக்கம்:சைவமும் தமிழும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 奉旨 பொருளிடத்தே இருத்தல் இயலாது. இவ்வாறே பிறவற் றையும் சிந்தித்து அறியலாம். மேற்கூறிய () இல்லத் தோன்றாது உள்ளது அழி யாது. (ii) மாறுபட்ட தன்மைகள் ஒரு பொருளின்கண் இருத்தல் இயலாது” என்ற இரு முடிவுகளின் அடிப்படையில் நோக்கினால் பதி, பசு, பாசம்’ என்ற முப்பொருள்களும் உள்ளன என்பதும் அவை மூன்றும் அனாதி நித்தியப் பொருள்கள்’ என்பதும் நிலை பெற்ற உண்மை முடிவு களாகும் என்ப து இனிது தெளிவாகின்றதன்றோ? இப்படித் தெளிவானாலும், இறைவன் உலகைப் படைக்கின்றான்; அழிக்கின்றான்' என்பதன் கருத்து நின் பால் ஒரு குழப்பத்தை விளைவிக்கலாம். இக் குழப் பத்தையும் போக்க வேண்டுவது இன்றியமையாததா கின்றது. உலகம்' என்பது காரணப் பிரபஞ்சம்”, 'காரியப் பிரபஞ்சம் என இருவகைப்படும். காரணப் பிர பஞ்சம்’ என்பது, மண்', 'பொன்’ போல்வது: காரியப் பிர பஞ்சம்” என்பது குடம்’, ‘அணி போல்வது. குயவன்மண்ணி லிருந்து குடத்தையும் பொற்கொல்லன் பொன்னிலிருந்து அணியையும் தோற்றுவித்தலன்றி அவர்கள் மண்ணையோ பொன்னையோ தோற்றுவித்தல் இல்லை. அது போலவே, இறைவன் காரியப் பிரபஞ்சத்தைக் காரணப் பிரபஞ்சத்தி லிருந்து தோற்றுவித்துப் பின் அதிலே ஒடுக்குவதன்றிக் காரணப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல் இல்லை. ஆகவே, இறைவன் படைக்கின்றான். அழிக்கின்றான்' என்றால் அவ்வாறு செய்வது காரியப் பிரபஞ்சத்தைத்தான் எனவும், காரணப் பிரபஞ்சம் அனாதி நித்தியம் எனவும் பகுத்துணர்ந்து தெளிவு பெறவேண்டும். காரியப் பிர பஞ்சம் தோற்ற ஒடுக்கங்களை உடையதாயினும் காரணப் பிரபஞ்சத்திற்கு அவை இல்லாமையால் அஃது அனாதி நித்தியமேயாம் என்று தெளிவு பெறுக, இதனால் உலகம் உள் பொருள் என்பது தெளிவா விருக்கும் என்று கருதுகிறேன். கடிதம் நீண்டு விட்டதால்