பக்கம்:சைவமும் தமிழும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சைவ சமய விளக்கு 'உலகத் தோற்றத்திற்குக் கருத்தா ஒருவன் வேண்டும் என் பதையும் அதனோடொத்த கருத்துகளையும் அடுத்த கடிதத் தில் விளக்குவேன். - அன்டன், கார்த்திகேயன். ア அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன்; நலனே விளைந்திடுக. முன்னர் நுண்ணிய நிலையிலுள்ள பொருள் பரு நிலையில் புலனாய்த் தோன்றும் என்பதைச் சென்ற கடிதத்தில் விளக்கினேன். உலகத்தைத் தோற்றுவித்தற் குக் இக்கருத்தா ஒருவன் உளனாதல் வேண்டும் என்பதை கடிதத்தில் விளக்குவேன். உலகம் தானே தோன்றிற்று என்று கொள்ளலாகாது. ஏனெனில், உலகத்தை இல் பொருள் எனக் கொள்ளாது உள்பொருள் எனக் கொண்டது எதனால்? இல்லது தோன்றாமையை அறிந்த கருதலளவைபற்றியன்றோ? 'உலகம் உள் பொருள் என்றற்கும் உலகத்திற்குக் கருத்தா ஒருவன் உண்டு என்பதற்கும் முற்றிலும் தொடர்பு உண்டு. எங்ங்னம்? இல்லது தோன்றாது. என்பது போல், உள்ளது, அதனைத் தோற்றுவிக்கின்ற முதல்வன் ஒருவன் இல்லாமல் தோன்றாது என்பதும் ஒரு பேருண்மையாகும். இவ்வுண்மை காட்சியளவையிலேயே எளிதில் விளங்குவதாகும். இதனை எடுத்துக் காட்டு களால் விளக்குவது இன்றியமையாததாகின்றது. குடம், ஆடை, அணிகலன் முதலியன காரியப் பொருள்கள் என்பதை நீ நன்கு அறிவாய். அதாவது ஒவ்வொரு முதற் காரணப் பொருள்களாகும் இவை என்பது உனக்குத் தெரி யும். அதாவது, குடம் "மண்" என்னும் காரணப் பொருளி