பக்கம்:சைவமும் தமிழும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 43 விருந்து தோன்றியது; ஆடை நூல் என்னும் காரணப் பொருளிலிருந்து உண்டானது; அணிகலன் பொன், வெள்ளி கோன்ற உலோகங்களிலிருந்து புதிய உருவம் கொண்டது. ஆகவே, ஏற்கெனவே நீ நன்கு அறிந்த சற்காரிய வாதப்படி நோக்கினால், தோற்ற த்திற்கு முன்னும் அவை முறையே மேற்குறிப்பிட்ட காரணப் பொருள்களில் இருந்தனவேயாகும். ஆயினும், காரணங் களில் நுண்ணிய நிலையில் புலனாகாமல் இருந்த அவை பருநிலையில் தாமே தோன்றா. குயவனும் நெசவாளனும் பொற் கொல்லனும் ஆகிய செய்வோர்களால் தோன்றி னமை கண்கூடாகும். இனி, குடமோ ஆடையோ அணி கலனோ பிற காரியப் பொருள்களோ செய்வோர் இன்றித் தோன்றாமையும் காட்சியளவையால் பெறப் படுவதேயாகும். ஆகவே, 'உள்ளனவாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனையுடையன என்பது வெள்ளிடை விலங்கலாகும். இதனால், சற்காரிய முறைப் படித் தோன்றுவதாகிய உலகத்திற்கு அதனைத் தோற்று வித்தற்குக் கருத்தா ஒருவன் இன்றியமையாதவன் என்பது வலியுறுதல் தெளிவாகின்றதன்றோ? இதனை இன்னொருவிதமாகவும் விளக்கலாம். ஒரு காரியத்திற்கு முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் இன்றியமை யாதவை என்பதை நீ நன்கு அறிவாய். எ.டு. குடமாகிய காரியத்திற்கு மண் முதற்காரணம்.; தண்ட சக்கரம் துணைக்காரணம்; குயவன் நிமித்த காரணம். அதுபோல உலகமாகிய காரியத்திற்கு மாயை முதற்காரணம்: கடவுளது ஆற்றல் துணைக் காரணம்; கடவுள் நிமித்த காரணம். இவற்றால் (i) காரியப் பொருள்கட்குக் கருத்தா இன்றியமையாமை என்பதைத் தெளிவாயாக. - இன்னோர் உண்மையையும் நீ அறிதல் வேண்டும். சற் காரியவாதம் அறிவும் அறிவல்லாததும் வேறே என்று கூறு கின்றது. உள்ளது தோன்றுமேயன்றி இல்லது தோன்