பக்கம்:சைவமும் தமிழும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சைவ சமய விளக்கு றாமையின் அறிவில்லாத பொருளில் அறிவு என்றும் தோன்றுவதில்லை என்றும் தெரிவிக்கின்றது. மேலும், அறிவில்லாத பொருள் தானாகவே செயற்படுவதில்லை, என்பதும் நன்கு அறியத் தக்கது. எனவே, உலகம் செயற் படுவதென்றால் அஃது அறிவுடைய ஒரு கருத்தாவினாலே யாகும் என்பதையும் நீ உளங்கொள்ளல் வேண்டும். உலகம் மிகப் பெரிய பொருளாகலின் அதனை இயக்கும் கருத்தா எல்லையற்ற பேரறிவும் பேராற்றலும் உடையவனாக இருத்தல் வேண்டும். காந்தம் இரும்பை ஈர்ப்பதையும் நஞ்சு பற்றின இடமே யன்றி பல இடங்களில் பரவுவதையும் எடுத்துக்காட்டி அறிவில்லாத பொருள்களும் செயற்படும் என்று கூறுவர் சிலர். இது தவறு; பெருந்தவறு; பொருந்தாத எடுத்துக் காட்டுகள் காந்தம், இரும்பை ஈர்ப்பது அவ்விரண்டை யும் ஒருவன் நேர் முகமாகக் கொணரும் பொழுதுதான். நஞ்சு பரவுவதும் உயிருள்ள உடம்பில்தான். இதனால் அறிவுடைய பொருளின்றி அறிவில்லாத பொருள் செயற் படாது என்பதைத் தெளிக, ஆனால் நீ அறிவுக் கூர்மை யுடையவனாதலால் உயிர்கள் உலகத்திற்குக் கருத்தா வாதல் அமையாதோ?’ என்று வினவலாம். அமையாது’ என்பதே அதற்கு விடை. உயிர்கள் அறிவுடையன வாயினும் அவ்வறிவு உடம்போடு கூடிய பின்னரே விளங்கப் பெறும் தன்மையுடையது என்பதை நீ அறிதல் வேண்டும். இதனால் உடம்பில்லாத உயிர்கள். உடம் பையோ மற்றொன்றையோ தோற்றுவித்தல் இயலாது என்பதைத் தெளிக, ஆகவே (ii) பேரறிவுப் பொருளாகிய இறைவனே உலகத்திற்கு இன்றியமையாது வேண்டப்படும் கருத்தா ஆவன் என்பதைத் தெரிந்து தெளிக. பிறிதோர் உண்மையையும் நீ அறிந்து தெளிதல் வேண்டும். (iii) உலகம் முத்தொழில்களையுடையது' என் பதுவே அது. அதாவது, தோன்றல், கிற்றல், அழிதல் என்ற மூன்று நிலைகளையுடையது என்பதாகும். இதனை