பக்கம்:சைவமும் தமிழும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 45 விளக்க மெய்கண்டார் மூன்று ஏதுக்களைக் கூறுகின்றார். அவை அவயவப் பகுப்புடைமை, சடமாயும் பலவாயும் இருத்தல், சுட்டியறியப்படுதல் என்பவை யாகும். இவை ஒவ்வொன்றையும் தெளிவாக்குவேன். அவயவப் பகுப்பு : இது பிரிக்கப்படும் தன்மையாகும். குடம் உடைக்கப்படும்; ஆடை கிழிக்கப்படும். அதனால் அவை அவயவப் பகுப்புடையவை என்பது தெளிவாகும், அவைபோலவே. உலகமும் நிலம், நீர்' என்பன முதலாகப் பிரிக்கப்படும்; நிலமும் தோண்டப்படும்; நீரும் முகக்கப் படும். பிறவும் பிரிக் கப்படுவனவாகும். எல்லாப் பொருள் களும் அணுக்களாகப் பிரிக்கப்படும்’ என்பது எல்லோர்க் கும் உடன்பாடு. இதனால் உலகம் அவயவம் பகுப் புடையது' என்பது தெளிவாகின்றது. இவ்வாறு பிரிக்கப் படும் தன்மை ஆக்க அழிவுகட்குக் காரணமாதலை அனை வரும் நன்கு அறிவர். - சடாமாயும் பலவாயும் இருத்தல் : சடம்-அறிவில்லாதது. அறிவில்லாத பொருள் ஒன்றாய்ப் பலவாய் இருப்பின், அவை தோன்றி அழிவனவாகும். இதனை மண்ணால் ஆக்கப்படும் பொருள்களும், பொன் வெள்ளி முதலிய உலோகங்களால் ஆக்கப்படும் பொருள்களும் பிற ஆக்கப் பொருள்களும் ஒன்றாய் இல்லாது பலவாய் இருத்தல் கொண்டு அறியலாம். சுட்டியுணர்தல் : கண் முதலிய பொறிகளுக்கு உட்படு மாறு, இஃது இன்ன தன்மைய து’ என்று வரையறுத்து உணர்வதாகும். இவ்வாறு கருவிகரணங்களால் அளந் தறியப்படும் பொருள்களனைத்தும் தோன்றியழியக் கூடியன என்பது தெளிவாகும். காரணம், அளக்கும் கருவிகளாகிய ஐம்பொறி முதலியன தோன்றியழிவன 12. அணுவும் பல்வேறு துகள்களாகச் சிதைக்கப் பெறு வதை இன்றைய அறிவியல் தெளிவாக்கும்.