பக்கம்:சைவமும் தமிழும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சைவ சமய விளக்கு வாதலின் அவற்றிற்கு அகப்படும் பொருள்களும் அத் தன்மையுடையனவாய் இருக்கும் என்று சொல்லத்தேவை இல்லை. ஆகவே, உலகம், நிலம் நீர் நெருப்பு காற்று வானம் என்றாற்போல் அவயவப் பகுப்புடையதாயும் சடமும் பலவுமாயும் சுட்டியறியப் படுவதாயும் இருத் தலால் தோன்றியழியும் பொருள்களாகும். அதனால் உலகத் தினது தோற்றமும் அழிவும் ஏக காலத்தில் காட்சிக்கு வராவிடினும் கருதலுக்குரிய (அநுமானத்திற் குரிய) மூன்று ஏதுக்களையுடைமையால் அவைபற்றி அது தோன்றியழிதல் கருதி உணரப்படும் என்பதைத் தெளி வாக அறிவாயாக. இம் மூன்று ஏதுக்களையே மெய் கண்டார் 'அவன் அவள் அது எனும் அவை” - என்றும், வார்த் திகத்தில் "ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப் பட்ட பிரபஞ்சம்' ' என்றும் கூறியுள்ளதை ஆய்ந்து தெளிக. இவற்றால் உலகம் முத்தொழில் உடைமையால் உள் பொருளே என்பதும், உளதாய்த் தொழிற்படும் உலகத்தை அவ்வாறாகத் தொழிற்படுத்தும் கருத்தா ஒருவன் உளன் என்பதும் ஐயமின்றிப் பெறப்பட்டதை ஒர்ந்து அறிவாயாக. உலகிற்கு முதல்வன் ஒருவனோ பலரோ என்ற ஐயமும் நின்பால் ஏழலாம். இந்த ஐயத்தையும் போக்குவேன். ஒரு தொழிலைப் பலர் கூடிச் செய்யுமிடத்து அனைவரும் ஒரு தலைவன்வழி நின்று அவன் சொற்படிச் செய்வதை நீ உலகியலில் காண்கின்றா யன்றோ? இவ்வாறே உலகத்தைச் செயற்படுத்துவதில் பல கடவுளர் இருப்பினும், அவர் அனைவரும் முதற் கடவுள் ஒருவன்வழி நின்று அவன் திருவுளத்தின்படி தம் தொழிலைச் செய்வர். எல்லோரும் முதற் கடவுள் 13. சி. ஞா. போ. சூத், ! 14. டிெ. டிெ. மூத லதி, வார்த். 3 (i)