பக்கம்:சைவமும் தமிழும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 47 ஆகார். ஆகவே,(iv) உலகிற்கு முதல்வன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை என்று தெளிவு பெறுக, வேதத்தில் ஒரு கடவுளை முதற் கடவுளாகக் கூறாமல் ஒரோர் இடத்தில் ஒவ்வொருவனை முதற் கடவுளாகக் கூறுவதற்குக் காரணம் என்னை' என நீ வினவலாம். கூறு வேன்; அங்ஙனம் வேதம் கூறுதல் அவரைப் புகழ வந்த இடத்தில் அவரை முகமனாக உயர்த்துக் கூறிய உரையே யன்றி, ஆய்ந்து ஒரு படித்தாக முடித்துக் கூறிய உரை யன்று. ஆயினும், அதே வேதத்தில் கடவுள் ஒருவனோ? பலரோ?' என்ற ஐயத்தை நீக்கி ஒரு தலையாக முடிவு கூறும் இடத்தில் "கடவுள் ஒருவனே என்று கூறுவதைக் காணலாம். ஏகமே வாத்விதியம் பிரஹம், 'ஏகம் சத்' முதலிய வாக்கியங்களை நோக்கினால் இவ்வுண்மை புலனாகும். உலகில் உள்ள தொழில்கள் பலவாயினும் அவற்றை அடக்கி நிற்கும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் பெருந் தொழில்கள் மூன்று என்பதும், அத் தொழில்களைச் செய்யும் கடவுளர் மூவர் என்பதும், அவருள் ஒருவன் முதற் கடவுள்: ஏனைய இருவரும் அம் முதல்வன் அருள்வழி நிற்பவர் என்பதும் பொதுவாக யாவராலும் சொல்லப்பெறுவதை நீ அறிவாய். ஆயினும் "முழுமுதற் கடவுள் இவன்’ என ஒருவனை வரைந்து அறுதியிடுதலில் மட்டும் கருத்து வேறுபடுகின்றனர். இதனை நேரிய முறையில் ஈண்டு வரைந்து காட்டுவேன். ஒவ்வொரு தொழிலையன்றி, எல்லாத் தொழில்களையும் செய்யவல்லவனாய், எல்லா முதன்மையும் உடையவனே முதற் கடவுள்; அவ்வாறில்லாமல் ஒவ்வ்ொரு தொழிலை மட்டிலும் செய்யவல்லவராய், அவ்வத் தொழிலில் முதன்மை பெற்று, அவ்வத் தொழில்கட்கு மட்டிலும் உரியவராயிருப்பவர்கள் முதற் கடவுளின் அருள் வழி நிற்கும் தொழிற் கடவுளர் ஆவர். இதனை மேலும் தெளி வடையச் செய்வேன். -