பக்கம்:சைவமும் தமிழும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சைவ சமய விளக்கு படைத்தற் கடவுளும் காத்தற் கடவுளும் தாம் தாம் ஏனைய இருவரையும் படைத்தலும் காத்தலும் செய்வர் எனக் கூறின் பொருந்துவதாகும்; ஆயினும் ஏனைய இரு வரையும் அழிப்பர் எனக் கூறின் அது பொருந்தாத கூற்றாகும். ஏனெனில் படைப்பவனுக்கும் காப்பவனுக் கும் அழிப்பது தொழிலோடு எவ்வாற்றானும் இல்லை. இனி, அழித்தற் கடவுளுககு அவ்வாறின்றி அழிப்புக் காலத்தில் எல்லாப் பொருள்களோடுங்கூட, ஏனைய இருவரையும் கூட அழிப்பன்' என்றே கூறுதல் வேண்டும். ஏனெனில், அழிப்பின் இன்றியமையாமை கருதி எல்லோ ரையும் அழிக்கும்பொழுது ஒருவர், இருவரை அழியாது நிறுத்தி வைப்பன்' என்றற்கு ஒரு காரணமும் இல்லை யன்றோ? எனவே, அழிய வேண்டிய காலத்தில் அழிந்த உலகம் மீளத் தோன்ற வேண்டிய காலத்தில் தோன்று மாறு அனைத்தையும் தோற்றுவிப்பவன் அழித்தற் கடவுளேயன்றி பிறர் இல்லை என்பதை அறிக. இதனையே மெய்கண்ட தேவ நாயனார் ஒடுங்கிய சங்காரத்தின் அல்லது உற்பத்தி இன்மையின்' என்று உரைத்தருளினமை யையும் நோக்குக. - இதனை மேலும் தெளிவாக்குவேன். சற்காரிய வாதத்தை விளக்கும்போது அழித்தல்’ என்பது தூய நிலையில் உள்ளவற்றைச் சூக்கும நிலையில் படுத்து ஒடுக்கு தலாகும்; படைத்தல்’ என்பது சூக்கும நிலையிலுள்ள வற்றைக் தூல நிலைக்குக் கொணர்தலாகும்; காத்தல்” என்பது, அங்ங்ணம் கால நிலைக்குக் கொணர்ந்தவற்றை அந்நிலையிலே நிறுத்துதலாகும்” என்று விளக்கினதை ஈண்டு மீண்டும் சிந்திக்க. மெய்கண்ட தேவரும் சங்கா ரத்தை ஒடுங்கின சங்காரம் (சூத்.1, அதிக-2. வார்த்-4) என்று குறித்தது. இதுபற்றியே யாகும் என்பதையும் தெளிக. சூக்கும நிலை என்பது, காரணமும், முன்னே உள்ளதும், பெரியதும், நிலைபேறுடையதுமாகும்; துரல 15. சி. ஞா. போ. சூத் 1. அதிக-2. வார்த்-க்.