பக்கம்:சைவமும் தமிழும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 49 நிலை என்பது, காரியமும், பின்னே தோன்றுவதும், சிறிய தும், நிலையில்லாததுமாகும். இந்நிலையில் அழித்தல் குக்குமத் தொழிலாதலின் அத்தொழிற்குத் தலைவன் காரணமும், முன்னே உள்ளவனும், பெரியோனும், நிலை பேறுடையவனுமாவன்; துாலத் தொழிற்குத் தலைவர் காரியரும், பின்னே தோன்றுவோரும், சிறியோரும், நிலை யில்லாதவரும் ஆவர் என்பது நுண்ணுணர்வினோர்க்குப் புலனாகாமற். போகாது. ஆகவே காரணனாகிய அழித்தற் கடவுள் தொழிற்படுத்தும் தலைவனும், காரிய ராகிய ஏனையோர் அவனால், தொழிற் படுத்தப்பட்டு அவன் ஏவல்வழி நிற்போரும் ஆதல் வெள்ளிடை விலங்க லெனப் புலனாகின்ற தன்றோ? இவற்றையெல்லாம் கருதியே மெய்கண்ட தேவ நாயனாரும் 'சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம்' என்று கூறினார். இக்காரணங்களால் முதற் கடவுளைச் சங்காரத் தொழில் புரிபவனாகவும், முது காட்டில் உறைதல், சுடலைப் பொடி பூசுதல், என்பு மாலையும் தலை மாலையும் அணிதல் முதலிய கோலங்களையும், 'உருத்திரன்' ' என்னும் திருப் பெயரையும் உடைய வனாகவும் கூறுதல் ஆன்றோர் வழக்காயிற்று என்பதை யும் உன்னு:க. . 'அழித்தற் கடவுளே முதற் கடவுள்' என்ற உண்மையை உணர்ந்த பின்னர் அவனை அல் ஒரு தொழிற்கு மட்டிலும் உரியவனாக நினையாது, முத்தொழிற்கும் முதல் வனாக உணர்தல்வேண்டும். ஆகவே 'சங்கார காரணன் என்னும் திருப் பெயர் உருத்திரனைக் குறியாது, மூவரிலும் மேம் பட்டவனான சிவபெருமானையே குறிப்பதாகும். சிவ பெருமான் முத்தொழிற்கும் முதல்வன் என்பதை, 16. சி. ஞா. போ, சூத். (வார்த்திகம்.) - 17. உருத்திரன்- 'துக்கத்தை நீக்குளோன்” என்பது பொருள். சை. ச. வி.-4 . . . . . . ; .