பக்கம்:சைவமும் தமிழும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சைவ சமய விளக்கு நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில் தாக்காது கின்றுளத்தில் கண்டிறைவன்-ஆக்காே கண்ட கனவுணர்விற் கண்ட கனவுரைக் கண்டவரில் இற்றிட்டாய் கட்டு." (நொடித்தல்-அழித்தல்) என்ற வெண்பாவில் மெய்கண்டார் விளங்கக் கூறியிருத் தலால் தெளியலாம். இன்னும், சங்காரகாரணன் அன்றி ஏனைய படைத்தல் கடவுளும் காத்தல் கடவுளும் அவர்களோடு இந்திரன் முதலிய வானவர் பலரும் பசுக்களாகிய உயிர் வகை யினரே என்பதையும் நீ உணர்தல் வேண்டும். இவரெல் லாரும் புண்ணிய மிகுதியால் முதற் கடவுளின் அருள் வழி அவ்வப் பதவிகளைப் பெற்று, அவ்வித தொழில்களை நிகழ்த்தி, அவ்வவற்றிற்கேற்ற காலம் முடிவுற்ற பின்னர் அப்பதவியினின்றும் நீங்குவர். இதுபற்றியே மெய்யுணர் வுடையோர் இப்பதவிகளை விரும்புதல் இல்லை. மேலும், இவர்கள் யாவரும் உடம்பாகிய கருவியைப் பற்றி நின்று, அவ்வுடம்பின் அளவான சுட்டுணர்வையே’ உடையராய் இருத்தலே அவர் உயிர்த் தொகுதியைச் சார்ந்தவர் என்பதை விளக்கும். முதற் கடவுள் உடம் பின்றி எல்லையற்ற வியாபக உணர்வுடையவன் ே என்ற மற்றோர் இலக்கணமும் முதல்வனுக்குக் கூறி நிலை நிறுத்துவர் மெய்கண்டார். பரமசிவனுக்கும் திருமேனி: 18. சி. ஞா. போ. சூத் 1. அதிகர. 2, 2-ம். 4. வெண்பா. 19. சுட்டுணர்வு-ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருபொருளையே குறித்துணர்தல். இது சிற்றறிவு” என்றும் சொல்லப்பெறும். (கிஞ்சிஞ்ளுத்துவம்; - 20. வியாபக உணர்வு-காலவரையறையும் இடவாைனறை பும் இன்றி, எஞ்ஞான்றும் எவ்விடத்தும், எல்லாப் பொருளையும், முழு தோருங்குணர்தல். இது முற்றறிவு” எனவும் வழங்கப் பெறும் (சர்வஞ்ஞத்துவம்) -