பக்கம்:சைவமும் தமிழும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 鳄锡 பகரப் பெறுகின்றதே என்று நீ நினைக்கலாம். அத் திருமேனி பிறர் பொருட்டுத் தன் இச்சையால் கொண்டது; அத்திருமேனியைப் பெற்ற பின்னரே அவனுக்கு உணர்வு உண்டாயிற்று என்பது இல்லை. அஃது இன்றியே அவன் இயற்கை உணர்வுடையவன். இத்திருமேனிகள் கொண்ட கருத்து அடுத்த கடிதத்தில் விளக்கம் அடையும். எல்லாக் கடவுளர்க்கும் பிறப்பு இறப்புகள் சொல்லப்படுவதாலும் , பரமசிவனுக்கு அவை ஒரிடத்தும் சொல்லப் படாமை யாலும் இது தெளியப்படும். இதுபற்றியே அவன் பிறப்பில் பெருமான்’ என்று போற்றிப் புகழப்படுவதையும் ஒர்ந்து உணர்க. எனவே, இதுகாறும் கூறியவற்றால் 'உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் முதற் கடவுள் ஒருவன் உளன்: என்பதையும், அக்கடவுள் சிவபிரானே' என்பதையும், "அயன் அரி அரன்’ என்னும் முவரும் அவன் ஆணை வழி ஒவ்வொரு தொழிலைச் செய்யும் அதிகார மூர்த்திகள் என்பதையும், பிற தேவர்களும் அத்தன்மையினரே என்ப தையும் ஒருவாறு தெளிவித்தேன். இவற்றால் பதி உண்மை பற்றிய ஐயங்கள் யாவும் நீங்கித் தெளிவு பெற்றிருப்பாய் எனக் கருதுகின்றேன். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் கணிய துடைத்து ' என்ற வள்ளுவர் வாக்கையும் உன்னுக. இதனால் பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் விபரீத உணர்வு தூர்ந்து மெய்யுணர்வு எய்தப் பெறுவாய் என்றும் நம்புகின்றேன். இத்துடன் இக்கடிதத்தை நிறைவு செல் கின்றேன். . அன்பன், கார்த்திகேயன். Tஒன்3 (மெய்யுணர்தல்)