பக்கம்:சைவமும் தமிழும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

婷2 சைவ சமய விளக்கு அன்பார்ந்த கண்ணுதலப்பனுக்கு, தலன். நலனே விளைந்திடுக. சைவசிந்தாந்தத்தின் முடிந்த முடிபாகக் கொள்ளப்படும் முப்பொருள்களுள் பதியைப் பற்றிய சித்தாந்தக் கருத்துக்களை இந்தக் கடிதத்தில் விளக்குவேன். பதியைப்பற்றிப் பகர்வதற்கு முன்னர் பொருளின் இயல்புபற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளுக்ருப் பொது இயல்பு என்றும், சிறப்பு இயல்பு, என்றும் இரண்டு இயல்புகள் உண்டு. "இயல்பு’ என்றாலும் இலக்கணம் என்றாலும் ஒன்றேயாகும். ஒரு பொருட்கு அதன் தன்மையில் இயல்பாக என்றும் உள்ள இயல்பு சிறப்பியல்பு’ என்றும், மற்றொரு பொருளின் சார்பு காரணமாக ஒரு பொருளின்கண் உண்டாகி அச்சார்பு நீங்கியவழி உடன் நீங்கும் இயல்பு பொது இயல்பு என்றும் சித்தாந்தம் பேசும், சிறப்பியல்பைச் சொரூப இலக்கணம்' என்றும், பொது இயல்பைத் தடத்த இலக்கணம்' என்றும் வழங்குவர் சித்தாந்திகள்.” - பதி பசு பாசம்' என்னும் முப்பொருள்களின் இந்த இரண்டு இலக்கணங்களையும் நீ அறியவேண்டும். இந்த முப்பொருள்களுள் பதி ஏனையவற்றைவிடப் பேராற்றல் வாய்ந்தது. சுதந்திரம் உடையது. பசுவும் பாசமும் சுதந்திரத் தன்மையின்றிப் புதியின் விருப்பப்படி செயற் படுவனவாகும். மேலும், பகவும் பாசமும் மற்றொன்றின் சார்பினால் தன்மையில் மாறுபடும். பதியோ அங்ங்ணம் எந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபடாமல் என்றும் 22. சொரூபம்-தன் இயல்பு; தடத்தம் அயவிலுள்ள பொருட் கண் இருப்பது.