பக்கம்:சைவமும் தமிழும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் - 53 ஒரே பெற்றியதாய் இருக்கும். இது பற்றியே பதியை வட மொழியில் சித்’ என்றும், தமிழில் மெய்ப்பொருள். செம்பொருள்” என்றும் வழங்குவர். சத்’ என்பதை உள்ளது' என்று மொழிபெயர்த்துப் பேசுவர் சித்தாந்திகள். உள்ளது” என்பதை என்றும் ஒரு பெற்றி யதாய் உள்ளது என்று கொள்ளல் வேண்டும். ஆகவே, பிறிதொரு பொருளின் சார்பினால் மாறுபடாத தன்மை யையுடைய பதியிடல் பிறிதொன்றை நோக்காது தன்னையே தான் நோக்கி நிற்கும் நிலையில் காணப் படும் இயல்புகளே பதியின் சொரூப இலக்கணமாகும். பதி உலகத்தை நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகள் தடத்த இலக்கணமாகும். உயிர்களும் உலகம்’ என்பதனுள் அடங்கும் என்பதையும் அறிக. இனி, பதியின் சொரூப இலக்கணத்தை விளக்குவேன். இது குணம் குறிகளைக் கடந்த நிலை. பதி ஒன்றே; அதாவது அஃது ஏகமாய் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலானது; அது காணப்படும் உருவமற்றது; காலம் இடம் இவற்றால் அளவுபடுத்தப்படாதது; குணங்களும் இல்லை; அடையாளங்களும் இல்லை; மலமற்றது; என்றும் அழியா திருப்பது; ஆன்மாக்களுக்கு அறிவாய் நிற்பது; சலிப்பற்றது; அளவு படாததால் போக்கு வரவாகிய அசைவு இல்லாதது, காட்சிக்கும் கருத்துக்கும் அப்பாற்ற பட்டது. * - குணம்இ லான்குணம் குறிஇலான் குறைவிலான் கொடிதாம் புலம்இ லான்தனக் கென்னஓர் பற்றிலான் பொருந்தும் -******ുr-r هلا:مممممدم مسعدwم 23. வைதிக சம4ங்கள் பதிக்குக் கூறும் சத்து சித்து ஆனந்தம் என்ற இயல்புகள் ஒருவகையில் பொது வியல்புகளா கின்றன.