பக்கம்:சைவமும் தமிழும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ பதி இயல் 盛 உலகத்தை நோக்குங்கால் தனது சிறப்பியல்புகளில் ஒன்றா கிய பெருங்கருணை காரணமாக உயிர்களின் பொருட்டுத் தானே தனது விருப்பத்தால் தனது ஆற்றலை (சக்தியை)க் கொண்டு பல்வேறு நிலைகளை உடையதாக இருக்கும். இந்த நிலைகளே பதியின் தடத்த நிலைகளாகும். இவை யாவும் பதியின் அனந்த சக்தியாகிய அளவில்லாத ஆற்ற வால் வருவனவாதலின், பதியின் தடத்த நிலைகள் யாவும் அதன் சக்தியினால் ஆவனவாகும் என்பதை நீ அறிதல் வேண்டும். இதனால் சொரூப நிலையில் பதி சிவம்’ என்றும், தடத்த நிலையில் சக்தி என்றும் பேசப்படும். சொரூப நிலையில் சக்தி செயற்படாது அடங்கியிருத் தலால் பதி சிவம்’ என ஒன்றேயாக இருக்கும்; சக்தி செயற்படும் தடத்த நிலையில், சிவம் அதனோடு அச் செயலையெல்லாம் உடன் இயைந்து இயற்றி நிற்றலால் 'சிவமும் சக்தியும் இரண்டாய்-அம்மை அப்பனாய்மாதொரு பாகனாய்-இரண்டாய்த் தோற்றம் அளிக்கும். இந்நிலைகளை ஆளுடைய பிள்ளையார், - "ஓர்உரு ஆயினை மானாங் காரத்து ☞ @ເມourvo * என்று தமது திருஎழுகூற்றிருக்கையில் அருளிச் செய்திருத் தலைக் கருதுக. அடுத்து, பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கசக்கினும் கரக்கும்.' என்ற புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பகுதியும் இத் தடத்த நிலைகளையே குறித்தது என்பதையும் எண்ணி ஒர்க. - தடத்த நிலையில் பதி சக்தியினால் பல நிலைகளை யுடையது. இந்த நிலையில் அதற்கு உருவம் உண்டு; l:്. 27. தேவாரம் 1,128 ஆடி 1-2, 28. புறம்-1