பக்கம்:சைவமும் தமிழும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சைவ சமய விளக்கு தொழில் உண்டு; அவற்றிற்கு ஏற்ற பலப் பல பெயர்களும் உண்டு. ஆயினும், இவையனைத்தும் இறைவனின் அருள் காரணமாக உண்மையாற் கொண்டனவேயன்றி வெறும் கற்பனையல்ல என்பதை நீ அறிதல் வேண்டும். சொரூப இலக்கணம் எப்படி உண்மையோ, அப்படியே தடத்த இலக்கணமும் உண்மையாகும். தடத்த நிலைகளில் சிலவற்றை ஈண்டு விளக்கு தல் பொருத்த முடையதாகும். சொரூப நிலையில் பதி பரசிவம் என நிற்குங்கால் அதன் சக்தி பராசக்தி என வழங்கப் பெறும். அஃது உயிர்களின் அறிவை விளக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியே யாகும் என்று கருதுவதில் தவறில்லை. தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன கிதங்காக்கும் மகாசக்தி-அன்னை அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம் துவள திருத்தல் சுகம். எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்தது காண், நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு." - என்ற பாடல்களை நோக்கி இதனை அறியலாம். மற்றும், சித்தத்தி லேகின்று சேர்வ துனரும் - சிவசக்தி தன் புகழ் செப்பு கின்றோம்; இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.89 என்ற தாழிசையிலும் இதனைக் கண்டு தெளியலாம். 29. தோ. பா. மகாசக்தி வேண்டா-2, 4 39. டிெ, வையமுழுதும்-5