பக்கம்:சைவமும் தமிழும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 57 பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தியில் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிற்பட முற்படும்; அதனை "ஆதிசக்தி' என வழங்குவர். இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமாறு பிறப்பு இறப்பு களில் செலுத்தி நிற்றலால் திரோதான சக்தி' என்ற திருப் பெயரையும் உ ைட ய து. திரோதானம்-மறைப்பது. இந்தச் சக்தியையே பாரதியார், பரிதியென்னும் பொருளிடையேய்ந்தனை, பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை: கரிய மேகத் திரளெனச் செல்லுவை; காலு மின்னென வந்துயிர் கொல்லுவை; சொரியும் ெேரனப் பல்லுயிர் போற்றுவை; சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை; விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை: வெல்க காளி யூெனதம்மை வெல்கவே." |్మణ్య ్న. " సౌః - • என்ற பாடலை அடுத்து வரும் பாடல்களெல்லாம் இந்தச் சக்தியையே குறித்தனவாகும் என்று கருதலாம். திரோதான சக்தி உலகத்தைத் தொழிற்படுத்த வேண்டும் என இச்சித்தலால் அது இச்சாசக்தி எனப் பெயர் பெறுகின்றது. அதற்குரிய வழிகளை அறிதலால் ஞானசக்தி என்ற திருநாமத்தையும் ஏற்கின்றது. அவ்வழியே தொழிற் படுத்தி நிற்றலால் கிரியா சக்தி என்ற திருப்பெயரையும் கொள்கின்றது. எனவே, பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி” என்று இவை பஞ்ச சக்திகள்’ என்று தொகைநிலை பெற்றுத் திகழ்வதையும் தெரிந்து கொள் வாயாக. இச்சாசக்தி எப்பொழுதும் செயற்பாட்டுக்குத் துணை யாய் நிற்கும். மற்றைய இரண்டும் ஒவ்வொன்றும் தனித் இ.டிெ : மகாசக்தி வாழ்த்து