பக்கம்:சைவமும் தமிழும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சைவ சமய விளக்கு தனியாகவும் இணைந்தும் ஏறியும் குறைந்தும் செயற் படும். இதனால் தடத்த நிலைகள் பெரும்பான்மையாக ஐந்து வகைப்பட்டு திற்கும். இவற்றையும் நீ தெரிந்து தெளிய வேண்டும். ஞானசக்தி மாத்திரம் தொழிற்படும் நிலையில் பதி 'சிவம்’ என நிற்கும்; கிரியா சக்தி மாத்திரம் தொழிற்படும் நிலையில் பதி சக்தி' என நிற்கும்; இரண்டும் ஒப்பத் தொழிற்படும் நிலையில் பதி சதா சிவம் என நிற்கும். ஞானசக்தி குறைந்து நிற்க கிரியாசக்தி மிக்குத் தொழிற்படும் நிலையில் பதி மகேசுவரன்’ என நிற்கும். கிரியா சக்தி குறைந்து நிற்க, ஞானசக்தி மிக்குத் தொழிற் படும் நிலையில் பதி 'வித்தை’ என நிற்கும்-இந்த விவரங் களையும் அறிவாயாக. மேற் கூறியவற்றால் சொரூப நிலையில் இறைவன் தன்க்கென்று ஒர் உருவும், தொழிலும், பெயரும் இல்லாதவ னாயினும் தடத்த நிலையில் உயிர்களின் பொருட்டுப் பலப் பல உருவும் தொழிலும் பெயரும் உடையவனா கின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதனைத் தம் அநுபூதியில் தெளிந்த மணிவாசகப் பெருமான், ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க் காயிரம் திருநாமம் பாடிகாம் தெள்ளேtணம் கொட்டாமோ?? என்று அருளிச் செய்துள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். இவை தடத்த நிலையே யன்றி கற்பனையாகாமையை அறிந்து தெளிக. இச் செய்திகளையே இன்னும் விளக்கமாகத் தொடர்ந்து வரும் கடிதம் ஒன்றில் சரியான சந்தர்ப்பத் தில் மேலும் தெளிவாக்குவேன். அன்பன், கார்த்திகேயன் STSAMS 32. திருவாச-திருத்தெள்ளேர்ணம்.1