பக்கம்:சைவமும் தமிழும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 9 ஒ அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நவனே விழைகின்றேன். இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல்’ என்ற முத்தொழில்களைச் செய்கின்றான் என்பதை முன் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இத் தொழில்களைச் செய்வது எதன் பொருட்டு? என்பதை இக்கடிதத்தில் விளக்குவேன். கம்பன் போன்ற கவிஞர்கள் இறைவன் இவ்வாறு செய்வதை அலகிலா விளையாட்டு' என்கின்றனர். மணி வாசகப் பெருமானின், காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி’ (விளையாடி-விளையாடுபவனே!) என்ற அருள் மொழியாலும் இதனை அறியலாம். ஈண்டு விளையாட்டு என்று கூறுதல் சிறார்கள் யாதொரு குறிக் கோளும் இன்றிப் பொழுது போக்கும் விளையாட்டுப் போன்றது. அன்று. மிகப் பெரியதாகிய உலகத்தைப் படைத்துச் செயற் படுத்துவது மிகப் பெரிய தொழிலாயி னும், பேராற்றலுடைய பெரியோனோகிய முதல்வனுக்குகே அது ஒரு விளையாட்டு போல சிறிதும் வருத்தமின்றி மிக எளிதில் செய்வன் என்பதைத் தெரிவித்தல் பொருட்டே யாகும் என்பதை நீ அறிதல் வேண்டும். உயிர்கள் இம்மை, மறுமை, வீடு' என்னும் நலங்களைப் பெறுதலே 33. கம்பரா. காப்பு-1 - 84. திருவா, திருவெம்பாவை-12 (அடி. ஐந்தொழில் ஆற்றுதல் இறைவனுக்கு விளையாட்டு போன்றது. 35. வரம்பிலாற்றலுடிைமை என்பது இறைவனின் எண் குணங்களுள் ஒன்று என்பதை ஈண்டு நினைவு கூர்க.