பக்கம்:சைவமும் தமிழும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} சைவ சமய விளக்கு முதல்வனது தொழில்களின் பயனாகும் என்பதை ஈண்டு நீ உளங்கொள்வாயாக. ஐயாகீ பாட்கொண் உருளும் விளையாட்டின் உய்வார்கள் உங்யும் வகையெல்லாம் உய்க்தொழிந்தோம்." என்ற வாதவூரடிகளின் திருமொழியே இதற்குச் சான் றாகும். இதனால் கைம்மாறு கருதாத கருணையே முதல்வன் தொழில் செய்வதற்குக் காரணம் என்பது தெளிவு. கருணாநிதி", கருணாகரன்'-என்பன போன்ற இறைவனின் திருப்பெயர்களை உன்னுக. படைத்தல் : இறைவன் புரியும் தொழில்கள் யாவும் ஆருயிர்களின் நலத்தின் பொருட்டே என்பதை மேலும் தெளிவிப்பது இன்றியமையாத்தாகின்றது. இறைவன் உயிரையோ உலகத்தையோ புதிதாகப் படைத்தல் இல்லை என்பது சற்காரிய முறைப்படி முன்னர் விளக்கப் பட்டதை ஈண்டு நினைவுகூர்க. உலகம் சடம்; அறிவில் லாதது. உயிர், சித்து; அறிவுடையது. உலகில் நேரிடும் நன்மை தீமைகள் அறிவுடைய பொருளுக்கன்றி, அறி வில்லாத பொருளுக்கில்லை என்பதை நீ அறிவாய். ஆகவே, அறிவில்லாத உலகினை அறிவுடைய ஆரு யிர்க்குத் துணையாகும் வகையில் அமைத்து அவ் விரண்டினையும் ஒன்றுபடப் பிணைத்து வைப்பதே படைத்தல் என்ற தொழிலாகும். - உயிர்கட்குத் துணையாகும் வகை’ என்பது, அவை விரும்பும் விருப்பம். இந்த விருப்பம் எண்ணிறந்தவை யாயினும் அவை இம்மை, மறுமை, வீடு' என்ற மூன்றில் அடங்கும். சில உயிர்கள் இம்மையிலேயே மூழ்கிக் கிடக் கும்; சில மறுமையில் நாட்டம் கொள்ளும் சில விட்டின் பத்தில் அவாவுடையனவாக இருக்கும். இவற்றையெல் லாம் உயிர்கள் உடம்பின்றி அடைதல் இயலாது. ஆகவே, 86. திருவா, திருவெம்.1 (அடி.6;