பக்கம்:சைவமும் தமிழும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

صلى الله عليه وسلم جصلى الله عليه وسلم பதி இயல் 6 # உயிர்களின் விருப்பத்திற்கேற்ப உடம்பு முதலியவற்றை உயிருக்கு அமைத்துக் கொடுத்தலே படைப்பு’ என்பதா கின்றது என்பது தெளிவாகின்றதன்றோ? அப்பர் அடி &sశ్రఓలి, வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்." என்று அருளிச் செய்துள்ளமையையும் காண்க. உலகம்’ காசியப் பொருள் என்பதையும் அதற்கு முதற் காரணம் மாயை' என்பதையும் நீ நன்கு அறிவாய். மாயையினின்று உலகைத் தோற்றுவித்து உயிர்கட்குக் கூட்டுவிப்பதே "படைத்தல்’ ஆகும் என்பதைத் தெளிக. மாயையாகிய சடப்பொருளிலிருந்து தோற்றுவிக்கப் படும் உலகம் தனு கரணம், புவனம், போகம்’ என் நான்கு வகைப்படும். தனு என்பது உ.ம்பு; கரணம் என்பது, மனம் முதலிய உட்கருவிகள் (அந்தக்கரணங்கள்); புவனம் என்பது, உலாவும் இடம்; போகம் என்பது, நுகர்ச்சிப் பொருள். இறைவன் உயிர்களை ஒரே வகையாகப் படைக் காமல் பல வகையான வேற்றுமைகள் அமையப் படைத்த தற்குக் காரணம் அவ்வவற்றின் வினைகளே என்று சமய நூல்கள் முழங்குவதை நீ அறிவாய். இந்த வினையே மேலே குறிப்பிட்ட விருப்பமாகும். விருப்பத்திற்கேற்பப் படைத்தலால் வினை நீங்குவதற்குரிய வழியை அடை விப்பது படைத்தலின் பயனாகின்றது. இறைவன் அருளிய தனு கரண புவன போகங்களை அழியாமல் நிறுத்திப் பயன்படச் செய்வதே காத்தல் ஆகும். ஆகவே, உயிர்கள் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குரிய வழியில் நின்று: அதனை அங்ங்னமே நிறைவித்துக் கொள்ளத் துணை புரிவதே காத்தல்’ என்பது தெளிவாகின்றது. வினை நீக்கத் திற்கு உரித்தாகிய வழியில் நின்று வினை நீங்கப் பெறு 37. தேவாரம் , 6.23: !