பக்கம்:சைவமும் தமிழும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

铬2 சைவ சமய விளத்கு தலே காத்தலின் பயனாகின்றது. இங்ஙனம், இம்மை மறுமை உலகங்களில் இன்பங்களை நுகர்வதற்குரிய உடம்புகளை எடுத்துப் பிறந்து, பின் இறந்து உழலும் நிலையினின்றும் நீங்கிச் செயலற்றிருக்கு மாறு தனு கரண புவன போகங் களைப் பிரித்து விடுதலே அழித்தல்’ ஆகும். ஆகவே, பிறப்பு இறப்புகளில் உழன்ற இளைப்பு நீங்குதலே அழித்தலின் பயனாகின்றது. இங்கனம் இறைவனது முத் தொழிலும் உயிருக்குப் பயன்படுவதை அறிந்து தெளிக. இந்த முத்தொழில் களைத் தவிர, மறைத்தல், அருளல்’ என்ற வேறு இரண்டு தொழில்களையும் சைவ சித்தாந்தம் பேசும். இவற்றையும் விளக்குவேன். உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவ மலம்". இதன் மறைக்கும் ஆற்றலைத் தாண்டி, மாயை கன்மங்களால் உலக இன்பத்தைத் தோற்றுவித்து, இறைவன் உயிர்கட்குத் தன்னைக் காட் டாது உலகத்தையே நோக்கியிருக்கச் செய்தலே மறைத் தல் ஆகும். இச்செயலால் ஆணவ மலத்தின் ஆற்றல் நாள டைவில் குறைந்து ஒடுங்கிவிடும். இதுவே மறைத்தலின் பயனா கின்றது. ஆணவ மலத்தின் ஆற்றல் ஒடுங்கியவுடன் உயிர் கட்கு இறைவனை நாடும் விருப்பம் நிகழும. அப்பொழுது இறைவன் தன்னைக் காட்டி, உயிர்களை மலங்களினின்றும் நீக்கித் தன்னைக் அடைவித்தலே அருளல் ஆகும். ஆகவே, இறைவன் திருவடியின்பமாகிய பேன்ேபத்தைப் பெறுதலே அருளல் தொழிலின் பயனாகின்றது. இக் கூறிய வற்றால் இறைவனது ஐந்தொழில்களும் ஆருயிர்களின் பொருட்டுச் செய்யும் அருட்டொழில்களே என்பது தெளி வாகின்றதன்றோ? இன்னும் ஓர் உண்மையையும் ஈண்டு நீ அறிந்து கொள்ளல் வேண்டும். வீட்டின்பத்தை அடைந்த பின்னர் உயிர்கட்குத் தனுகரணம் முதலியன வேண்டா; ஆயினும், 38. இதன் இயல்புபற்றிய விரிவான விளக்கம் பின்னர்த் தரப் படும்.