பக்கம்:சைவமும் தமிழும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் §3 அதனை எய்தும் நெறியிற் செல்வதற்குத் தனு, கரணம் முதலியன இன்றியமையாதனவாகும். ஆகவே, வீட்டின் பத்தை நாடுவோர்க்கும் அதனை அடைதற்பொருட்டு இறைவன் தனு கரணம் முதலியவற்றைக் கொடுத் தருளுவன் என்பதையும் அறிந்து தெளிக. இனி, இறைவனுக்கு உலகத்தோடுள்ள தொடர்பை விளக்குவேன். மெய்கண்டார் இத்தொடர்பை அத்து விதம் என்று விளக்குகின்றார். அத்துவிதமாவது, இரண் டல்லாமை (அதாவது பிரிவின்மை) என்பது அவர் தரும் விளக்கம். அத்துவிதம்’ என்ற சொல்லே அந்நியநாத்தியை (பிரிப்பின்மையை) உணர்த்துமாயிற்று' என்று உரைத் தருளினமையைக் காண்க. பிரிவின்மை' எனவே, பொருள் இரண்டு என்பதும் இரண்டாயினும் வேறு வேறாய் நில் லாது ஒன்றியே நிற்கும் என்பதும் பெறப்படும். அத்து விதத் தொடர்பில் அபேதம், பேதம், பேதாபேதம் என்ற மூன்று தன்மையும் ஒருங்கு காணப்படுகின்றது. இம் மூன்றற்கும் பொதுவாய் நிற்றலையே வேதம் அத் விதியம்’ (அத்துவிதம்) என்று கூறுகின்றது. இதன் உண்மை ப்பொருள் சித்தாந்தத்துள்தான் விளங்குகின்றது. 'இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும், பொருட்டன்துை,ஆறாம். உயிர்க்கும் உயிராதல் தன்மையால் கிமீ நின்று உலகத்தைச் செயற்படுத்து வான்’ என்பது சித்தாந்தம் தரும் விளக்கம். இந்த விளக்கத்தை மேலும் விரித்துக் காட்டுவது இன்றியமையாததாகின்றது. இறைவனும் உலகமும் ஒன்றி நிற்கும் கலப்பினை நோக்குங்கால் இரண்டும் ஒன்றே எனக் கூறுமாறு அபேதமாய் நிற்கின்றான். பொருள் தன்மையை 9ே. உலகம் என்பதில் சேததப் பிரபஞ்சம், அசேததப் பி பஞ்சம் என்ற இரண்டும் அடங்கும். - 40. சி.ஞா.போ. 2-ஆம் சூத்திரம் முதலதிகரணம்-வார்த்திகம் (7.5)-(சிற்துரை காண்க