பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

107

கல்வெட்டொன்று[1] "தென்குடித் திட்டையுடைய நாயனார் தேறினார் என்று கூறுகிறது. திருப்புகலூர்ப்பதிகமொன்றில், போற்றிசைத்து என்றும் பணிவாரை மெய்ய நின்ற பெருமான்[2]' என்று ஞானசம்பந்தர் பரவினர் ; பட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள கிரமங்கலத்தில் எழுந்தருளிய இறைவனை, "மெய்ய நின்ற நாயனார் ' எனப் பெயரிட்டுப் போற்றின்ரென அவ்வூர்க் கல்வெட்டுக்[3] கூறுகிறது. திருப்புத்தூரிலுள்ள இறைவனை ஞானசம் பந்தர் ஒங்கு கோயில்லுறைவார்[4]' என்றும், அக்கோயிலை ஓங்கு கோயில் [5]' என்றும் குறித்தாராக, மெய்கண்டார் சந்தானத்துத் திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தரென்பார் ஒங்கு கோயில் என்றே கொண்டு ஒரு புராணம் பாடினாரென்று[6] அக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. தஞ்சை காட்டிலுள்ள குற்றாலத்துக்குத் திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தில் திருத்துருத்தி என்று பெயர் குறிக்கப்படுகிறது. இதனை ஞான சம்பந்தர் பாடுமிடத்து, ஒரு பாட்டில், "பைம்பொழில் சூழ் வீங்குநீர்த் துருத்தியார்[7] ' எனக் குறித்தனர். பின்வந்தோர் இத்தொடரினையே, அவ்வூர்ப் பெயராகக் கொண்டு கல்வெட்டுக்களிற் குறிக்கும் போதெல்லாம், திருவழுந்துார் நாட்டு வீங்குநீர்த் துருத்தியுடையார் . சொன்னவாறறியும் மகாதேவர்[8] ' எனவும், விங்கு நீர்த்துருத்தியுடைய திருக்கற்றளி மகாதேவர்[9] எனவும் வழங்கினார். திரு அவளிவணல்லுTர்த் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர், இறைவனை, " புரிநூலொடு குலாவித், தம்பரிசினோடு சுடுநீறு தடவந்து...செம்பொன் நெடுமாடமதில் கல்வரை விலாக, அம்பெரிய எய்தபெருமான் உறைவது அவளிவணல்லூரே [10]' என்று சிறப்பித்தார்.




  1. 1.A. R. No. 150 of 1933-4.
  2. 2.ஞானசம். 2 : 5.
  3. 3. A. R. No. 125 of 1935-6.
  4. 4.ஞானசம், 26 : 3.
  5. 5. A. R. No. 186 of 1935–6.
  6. 6. A. R. No. 180 of 1935-6.
  7. 7.ஞானசம். 348 : 1.
  8. 8. A. R. No. 101 of 1926.
  9. 9.A. R. No. 104 of 1926.
  10. 10,ஞானசம், 340: 1.