பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சைவ இலக்கிய வரலாறு

அவ்வூர்க் கல்வெட்டுக்கள், அத் திருப்பாட்டிற் காணப்படும் தம்பரிசு', அம்பெரிய என்ற தொடர்களால் இறைவனைத் தம்பரிசு உடைய நாயனார் ” என்றும் அம்பெரிந்த பெருமான்' என்றும் பெயர் குறித்து, அவளிவணல்லூர் உடையார் தம் பரிசுடைய நாயனார் கோயிலில் எழுந்தளுகிற...... அம்பெரிந்த பெருமானயும் நாச்சியாரையும்... எழுந்தருளுவித்தான்...... சாத்தன் உடையான் தம்பரிசு உடையான் ஆதிச்ச தேவனான அமரகோன்[1]' என்று கூறுகின்றன. அச் சிறுபாக்கத்துத் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர் இறைவனை அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே[2] " என்றதனால், கல்வெட்டுக்கள், அச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சி கொண்ட நாயனார்[3] ' என்று குறிக்கலுற்றன. இவ்வண்ணமே, குரங்கனின் முட்டத்து இறைவனைக் கொய்யா மலர் சூடுவார்[4]' எனவும், திருப்புறம் பயத்து இறைவன் கோயிலிலுள்ள தென்முகக்கடவுளை அறமுரைத்த நாயனார்[5] எனவும் பிறவும் கல்வெட்டுக்கள் கூறுவது, ஆங்காங்கு ஞானசம்பந்தர்பாடிய திருப்பதிகங்களைக் கண்டு மேற்கொண்டனவாகும்.

திருஞானசம்பந்தர், ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில், இறைவியைக் குறித்துரைத்துப் பாடிய சொற்றொடர்களையே பெரும்பாலும் அவ்வவ்வூர்க் கல் வெட்டுக்கள் எடுத்தோதியுள்ளன. திருவெண்காட்டுத் திருப்பதிகத்தில் இறைவியை "வேயன தோளுமை'[6] என்றாராகக் கல்வெட்டு, "வேயன தோளி நாச்சியார்[7] எனவும், திருவோத்துார்த் திருப்பதிகம் இடையீர் போகா இளமுலையாள்[8]' என்றதாகக் கல்வெட்டு இளமுலை நாச்சி[9] யெனவும், அச்சிறுபாக்கத்துப் பதிகம், இளங்கிளையரிவை[10]' என்றதாகக் கல்வெட்டு


  1. 1.S. I. I. Vol. VIII. No. 201.
  2. 2. ஞானசம். 77 : 1-10,
  3. 3. S. I. I, Vol. VII. No. 447.
  4. 4. A. R. No. 294 of 1912.
  5. 5. A. R. No. 335 of 1927.
  6. 6. ஞானசம். 184:2.
  7. 7.S. i. I. Vol. V, No. 987.
  8. 8. 2ை 54 : 2.
  9. 9. S. I. I. Vol. VII. No. 107.
  10. 10. டிை 77 : 7.