பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ இலக்கிய வரலாறு

இடைப்பகுதி சோழ நாடு என்றும் இதன் தென்பகுதி பாண்டி நாடு என்றும் வழங்கும்.[1] இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும் சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்கு நாடாகும். மேலைக்கடற்கரைப்பகுதி சேரநாடு.

தொண்டை நாட்டில் வடபெண்ணை, பொன்முகலி, பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு என்பனவும், சோழ நாட்டில் காவிரி வெள்ளாறு என்பனவும், பாண்டி நாட்டில் வையை தாமிரபரணி என்பனவும் சிறப்புடைய ஆறுகளாகும்.

சைவ இலக்கியங்களின் தோற்றக் காலத்தில் இந்த நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.[2] நடுநாடுமட்டில் திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் [3] வழங்கிற்று. வேறு சில காலங்களில் வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழ நாட்டோடும் சேர்ந்து[4] வழங்கியதுண்டு.

இந்த நாடுகளில் பாண்டிநாட்டில் பாண்டியரும், சோழநாட்டில் சோழரும், தொண்டைநாட்டில் தொண்டையரும் அரசு புரிந்தனர். ஆயினும் அக்காலத்தே இவரோடு களப்பிரரும், மாளவரும், சிங்களரும், பல்லவரும் எனப் பல வேந்தர்கள் காணப்பட்டனர். சைவ இலக்கியங்கள் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பல்லவ வேந்தர் சிறப்பு நிலையில் இருந்து ஆட்சி செய்தனர். அவர்களுடைய ஆட்சி, நம் சைவத் திருமுறைக் காலத்தில், பெரும்பாலும் தொண்டைநாட்டிலும், சிறுபான்மை, சோழ பாண்டிய நாடுகளிலும் பரந்திருந்தது.[5] ஆகவே திருமுறைகள் தோன்றுதற்கிடமான இக்கால நிலையினை வரலாற்று


  1. 1. செந். செல்வி. Vol. XXII. பக். 275.
  2. 2. S. I. I. Ins. Vol. XII.
  3. 3. A. R. No. 376 of 1908 & 308 of 1921.
  4. 4. A. R. 393, 513 of 1921, 414, 423 & 533 of 1921.
  5. 5. P. S. Ins.