பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சைவ இலக்கிய வரலாறு

 பாராட்டினர். அவர்க்குப் பின்வந்தோர், ஞானசம்பந்தரை ஆணை நமதென்ற பெருமாள் எனப் போற்றிப் புகழ்வாராயினர். அந்நாளில், பிரான்மலை நிற்கும் நாட்டைச் சேர்ந்த நகரத்தாருள் பலர், திருஞானசம்பந்தர் பால் மிக்க ஈடுபாடுடையராய் இருந்தனர். கலசப்பாடியுடையார் திருஞானசம்பந்தர், நாவலூருடையார் திருஞான சம்பந்தர்" எனப் பலர் அவரிடையே காணப்படுவதும், அவருள் ஒருவர் "பட்டமுடையார் ஆணை நமதென்ற பெருமாள்"[1] என்ற பெயர்கொண்டிருப்பதும் குறிக்கத்தகுவனவாகும்.

திருவண்ணாமலைப் பதிகத்தில் ஞானசம்பந்தர் வழங்கும் "பெண்ணாகிய பெருமான்”[2] என்ற தொடர், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள மாறங்கியூர்க் கல்வெட்டொன்றில், "இருங்கோளப்பாடி நாட்டுச் சிற்றாமூருடையான் தியாகப் பெருமாள் பெண்ணாகிய பெருமான்"[3] என்ற ஒரு தலைவ னுக்குப் பெயராக விளங்கியிருக்கிறது "மறையணி நாவினான் மாமழபாடியே"[4] யென்பது திருஞானசம்பந்தர் வழங்குவது; திருமழபாடிப் பகுதியில் வாழ்ந்த பட்டனொருவன் "மறையணிநாவினன் பட்டன்"[5] என்று பெயர் கூறப்படுகின்றான். திருநெல்வேலிப்பதிகத்தில் "மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூந்துறைகமழ் திருநெல்வேலி"[6] என்று ஞானசம்பந்தர் பாடினராக, அவ்வூரின் ஒரு பகுதிக்கே "சிந்துபூந்துறை" [7] என்ற பெயர் வழங்குவதாயிற்று. அப்பதிகத்தே "திருந்துமா மறையவர் திரு நெல்வேலி" எனவரும்தொடரில் திருந்துமாமறை யென்ற தொடரை வழிவகை யொன்றுக்குப் பெயராக அமைத்து "திருந்து மாமறைப்பிலாறு என்னும் பேரால் விட்டவழி"[8] என்று வழங்கியுள்ளனர்.

இறுதியாக ஒன்றுகூறி இப்பகுதியை முடிக்கின்றோம். திருஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்தில் மிறைக்கவி-


  1. S. I. I. VTo].VIII.No 442.
  2. ஞானசம். 10 : 1.
  3. A. R. No.102 of1935-6,
  4. ஞானசம்.286:2
  5. S. I. I. Vol. V. No. 634.
  6. ஞானசம்.10:11
  7. S. I. I. Vol. V. No. 410.
  8. S. I. I. Vol. V. No. 411.