பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

3

முறையில் காண்பது நேரிது. அதனால் கி. பி. ஆறாம்[1]நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஈறாகவுள்ள காலத்து அரசியல் வரலாற்றினைச் சுருங்கக் காணலாம்.

பல்லவரென்பவர் தொண்டைநாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர்.அவர் தமிழரல்லர்[2] காஞ்சிபுரத்து வைகுந்தப் பெருமாள் கோயிற் படிமங்கள் ஒன்றன் கீழ் "இது களிறின் தலையன்று ; நுன் மகனுடைய மகுடங்கள் இவையென்று தரண்டி கொண்ட போசர் இரணியவன்ம மகாராஜர்க்குச் சொல்ல" என்றொரு குறிப்புக்[3] காணப்படுகிறது. இதனால் பல்லவர் மகுடம் களிற்றின் மத்தகம் போன்றிருக்கும் என்பது விளங்கும். இவ்வாறே பாக்டிரிய நாட்டு மன்னனான தெமீட்டிரியஸ் என்பவன் நாணயங்களில் அவன் கோடு தாங்கிய யானைத்தலை போலும் வடிவுடைய முடியணிந்திருக்கக்[4] காண்கின்றோம். இது தமிழ்நாட்டு வேத்தியல்பன்று. ஆதலால் பல்லவர் இந்நாட்டினர் அல்லர் என்பது வலியுறுகிறது. அவர்களை தொண்டைநாட்டவரெனச் சிலர் கருதுவர். அதனை வற்புறுத்தத் தக்க நல்ல சான்று கிடையாது.

இவர்களுட் பலர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் தொண்டைநாடு போந்து அரசு நிலைபெறுவித்தலில் ஈடுபடவில்லை. அங்கே அவர்கட்கும் சளுக்கிய மன்னர்களுக்கும் போரே நிலவி வந்தது. பல்லவர் தொண்டைநாடு புகக் கருதினபோது சளுக்கி வேந்தர் போந்து தமிழ் வேந்தர்கட்குத் துணையாய் நின்று அவரை வென்று வெருட்டி விடுவர்.[5]பல்லவ வேந்தருள் பலர் சைவராகவும்[6], புத்தராகவும்,[7] வைணவராகவும்[8], சைனராகவும்[9] இருந்திருக்


  1. கி. பி. ஆறாம் நூற்றாண்டெனக் கருதுகிறோமாயினும், கி.பி. 575 முதலே பல்லவராட்சி கால்கொள்ளத் தொடங்கிற்று.
  2. Velurpalayam C. Plates.
  3. S. I. I. Vol. IV. பக். 11.
  4. S. I. I. Vol. XII.முன் பக் ii
  5. Ep. Indi. Vol.No.I.பக்11.
  6. பரமேஸ்வரவன்மன்
  7. புத்தவன்மன்
  8. சிம்மவிஷ்ணுவன்மன்
  9. மகேந்திரவன்மன் I