பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 சைவ இலக்கிய வரலாறு

என்றும், திருநாவுக்கரசர் தம் தமக்கையார் அறிவுரையை மேற்கொண்டு திருநீறணிந்து சூலைநோய் நீங்கினர்'1என் றும், வானுலக மகளிர் இனிய நடம்புரிந்து அவர் கருத்தைக் கலைக்க முயன்றாராக, அவர், அவர்களைத் துகளாக வெறுத்து ஒதுக்கினர்2 என்றும் அவர் 4900 திருப்பதிகங்கள் பாடினர்3என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் வரலாறு குறித்துப் பிற்காலத்தில் எழுந்த பாடல்கள் மிகப் பல ; அவை திருத்தொண்டர் புராணத்தை மேற்கொண்டன. - <bதிருநாவுக்கரசரது காலம்b/> திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒரு காலத்தவர் என்பது முன்பே கூறப்பட்டது. இருவரும் பன்முறையும் தம்மில் கூடி இறைவனை வழிபட்டுள்ளனர். அதனால் திருஞானசம்பந்தர் வாழ்ந்த கி. பி. ஏழாம் நூற்றாண்டாகிய காலமே திருநாவுக்கரசர் வாழ்ந்த காலமாம் என்பது பொதுவாக விளங்கும் உண்மையாகும். திருநாவுக்கரசர் தமது எண்பத் தோராம் ஆண்டில் இறைவன் திருவடி நீழலெய்தினர் எனப் பழைய பாட்டு ஒன்று கூறுகிறது. அக்கூற்று அறிஞர் பலராலும் ஏற்கப்பெற்று நிலவுகிறது. மேலும், திருஞானசம்பந்தர் தோன்றுதற்குமுன்தோன்றி, அவர் இவ்வுலகில் நிலவிய காலமுற்றும் உடனிருந்து, அவர் இறைவனது அருளொளியிற் கலந்த பின்னும் இருந்து சிறந்தவர் திருநாவுக்கரசர் என்பது சைவவுலகு நன்கு அறிந்த செய்திகளுள் ஒன்று. :

காஞ்சி நகரைத் தலைமை நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முதன் மகேந்திரவன்மன் தொடக்கத்தில் சமண சமயத்திலிருந்து பின்னர்த் திருநாவுக்கரசரால் சைவ-

______________________________

1. திருநா. திருவேகா. 1.
2.    ஷ.  2.
3.    ஷ.   3, 7.

4"அப்பருக்கு எண்பத்தொன்று

  அருள்வாத வூரர்க்குச், 
செப்பிய நாலெட்டில்.தெய்வீகம்- 
 இப்புவியில், 
சுந்தரர்க்கு மூவாறு தொன் 
ஞான சம்பந்தர்க்கு 
அந்தம் பதினாறு அறி" என்பது பழைய வெண்பா.