பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Right138வார்ப்புரு:சைவ இவக்கியவரலாறு



மன்னர் வாழ்வும் அவர்க்குத் தம் அடி சூடிய துகளினும் புல்லிதாகும்; ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது இறைவன் திருவடியையே தஞ்சம்1 என்று எண்ணுவர். சிவனடியார் ஆவுரித்துத் தின்றுழலும் புலையராயினும்2 அவர்களைத் தாம் வணங்கும் கடவுளாகக் கருதிப் போற்றுவர் இறைவன் திருப்பெயரை ஓதாதவரும் அவனது திருநீற்றை அணியாதவரும் "அளியற்றவர்: பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி "3 இறக்கின்றவர் - இறைவன் திருக்கோயில் இல்லாத ஊர்களும், திருநீறணி யாதவரும், இறைவனைப் பத்திமையாற் பாடாதவரும் வாழும் ஊர்களும் " ஊரல்ல; அடவி காடே"4 என்பது இந்தச் சிவனடியார்களது உட்கோளாகும். இறைவன், அரன் என்று திருப்பெயர் கொண்டதே தொண்டர்க்கு உளதாகும் துன்பத்தை அறுத்தற்கேயாகும்; "தொடருந் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து, அடரும்போது, அரனாய் அருள் செய்வர்"5 என்று திருநாவுக்கரசர் தெளிய உரைப்பது காண்க. சிவாயவென்னும் இறைவன் திருப் பெயரை ஓதி வழிபடுவார்க்கே வானகம் படைத்தருளப்பட்டது6 என்பதும், அவ்வாறு உலகில் வாழும் வாழ்வு பெற்ற சிவனடியார்கள். இம்மையுலகவர் போல "நெல்லி னார் சோறுண்ணும்"7 நீர்மையுடையராகார். இவ்வுலகி லும், அவர்களது கருத்தறிந்து முடிக்கும் திருக்கருத்தால் அவரது குற்றேவலை எதிர்நோக்கி யிருப்பது இறைவன் பேரருள் இயல்பாகும். "கூம்பித் தொழுவார் தம் குற்றேவலைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி" எனத் திருநாவுக்கரசர் இவ்வியல்பை விதந்தோதிப் பாராட்டுவது காணத்தக்கது. • ,

இனி, சமண் சமயத்திலிருந்த போது இறைவனை அறியாது இகழ்ந்திருந்த திறத்தை மிக விரித்துக் கூறும் திரு.- ______________________________ 1. திருநா. 111 : 4. 2. திருநா. 309 ; 10. 3. ஷ 309 : 6. 4. ஷ 309 : 5. 5. ஷ. 165 : 8. 6 , ஷ 165: 8; 307: 10. 7. ஷ 49.6 8. ஷ 219 : 4. -

.